Flashback
சம்பளம் வாங்க மறுத்த விஜயகாந்த்… அதுவும் பாலசந்தர் படம்… என்னன்னு தெரியுமா?
விஜயகாந்த்தை தமிழ்த்திரை உலகில் கருப்பு எம்ஜிஆர்னு சொல்வாங்க. புரட்சிக்கலைஞர் என்றாலும் அவர் தான். அந்த வகையில் பல புரட்சிகளை நடிகர் சங்கத்திலும் செய்துள்ளார். படங்களிலும் சரி. அரசியலிலும் செய்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். இவர் ஒருமுறை இயக்குனர் சிகரம் பாலசந்தரின் படம் ஒன்றில் நடித்து விட்டும் சம்பளம் வாங்க மறுத்துள்ளார். அது என்ன படம்னு பார்க்கலாமா…
கே.பாலசந்தர் வருடந்தோறும் ஒரு படம் எடுப்பார். அதனால் தான் ராமநாராயணனைப் போல 100 படங்களை எடுத்தவர் தான் பாலசந்தர். ஆனால் இருவரும் வெவ்வேறு ஜானர்களில் படம் எடுப்பார்கள்.
பாலசந்தர் சார் மனதில் உறுதி வேண்டும் படத்தில் சுஷாசினியுடன் பல்வேறு நடிகர்கள் அதாவது சத்யராஜ், ரஜினி என ஆடுவது போல ஒரு பாடல்காட்சியைப் படமாக்கி இருப்பார். அவர்களில் ஒருவர் விஜயகாந்த். இந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்ததற்கு பாலசந்தர் கவிதாலயா சார்பில் ஒரு தொகையைக் கொடுத்தாராம்.
அதற்கு அவர் அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார். நம்ம டைரக்டர் சார் கூப்பிட்டுருக்காரு. நான் வந்து நடிச்சிருக்கேன். ‘சம்பளம் எல்லாம் எனக்குத் தராதீங்க’ன்னு ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம அந்தப் பாடல் காட்சிக்கு நடித்துக் கொடுத்துவிட்டுப் போனாராம்.
கமலை இந்தப் பாடலில் நடிக்கச் சொன்னதற்கு அது செட்டாகாது. சுஹாசினி எனக்கு மகள் மாதிரி. எங்க அண்ணன் பொண்ணு. ஊருக்கே தெரியும். நான் ஆடுனா அது மேட்ச்சா இருக்காது. நல்லாவும் இருக்காது என்று நடிக்கவில்லையாம்.
1987ல் கே.பாலசந்தர் தயாரித்து இயக்கிய படம் மனதில் உறுதி வேண்டும். சுஹாசினி, ஸ்ரீதர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரமேஷ் அரவிந்த், விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். கண்ணின் மணியே கண்ணின் மணியே என்ற பாடல் மிக அருமை. யேசுதாஸ் பாடிய மனதில் உறுதி வேண்டும் பாடல் செம மாஸ். கண்ணா வருவாயா, ஆச்சி ஆச்சி, சங்கத்தமிழ் கவியே, வங்காள கடலே ஆகிய பாடல்கள் உள்ளன. இவற்றில் வங்காள கடலே பாடலில் தான் சுஹாசினியுடன் ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த் உள்பட பலரும் ஆடிப்பாடுவர்.