Connect with us

television

மருமகள் முதல் மூன்று முடிச்சு வரை… சன்டிவி டாப்5 ஹிட் சீரியலில் இன்னைக்கு என்ன நடக்கப்போகுது?

சன் டிவி சீரியல்களின் இன்றைய புரோமோ தொகுப்புகள்

SUNTv: சன் டிவியில் பிரபலமாக இருக்கும் டாப் 5 சீரியல்களில் இன்று என்ன நடக்கப்போகிறது என்பதற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த தொகுப்பு.

மூன்று முடிச்சு தொடரில் வேணும்னா புஷ்பா அக்கா போகட்டும் என நந்தினி சொல்கிறார். மாதவி அவளை வேலை சொல்ல நீ யாரு என்கிறார். வீட்டில் செஞ்ச ஸ்வீட்டை சாப்பிடாம வெளியே ஆர்டர் பண்ணி சாப்பிடுறியா என அருணாச்சலம் கேட்கிறார். சுந்தரவல்லி மாறனும்னு நினைக்கிறது தப்புனு நந்தினி குடும்பத்தாரிடம் சொல்லுகிறார்.

சிங்க பெண்ணே தொடரில் ஆனந்தி புர்கா மாட்டிக் கொண்டு அன்பு வீட்டிற்கு வந்து இருக்கிறார். திடீரென அவர் தும்ம கருப்பா எனக் கூற அன்புவின் அம்மா அதிர்ச்சியாக கேட்கிறார். இதுகுறித்து ஆனந்தயிடம் கேட்க அவர் பொய் சொல்லி சமாளித்து விடுகிறார்.

சுந்தரி சீரியலில் பாட்டி சுந்தரியிடம் கார்த்திக் கண்ணு தெரியாதது போல் இதுவரை நடித்து வந்ததாக உண்மையை உடைத்து விடுகிறார். வெற்றியிடம் கார்த்தி நடந்து கொண்ட விஷயம் குறித்த சுந்தரி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மருமகள் சீரியலில் ரோகினியை காணும் என குடும்பத்தினர் பதறி தேடிக் கொண்டிருக்கின்றனர். வேள்விழி மீது தான் சந்தேகம் என பேச்சு வர அதிரை அவரிடம் சென்று கேட்கிறார். நான் சவால் விட்டு இருக்கிறேன் அதற்காக இந்த கல்யாணத்தை நிறுத்தவும் தயங்க மாட்டேன் என அவர் கூறுகிறார்.

Continue Reading

More in television

To Top