Biggboss
Biggboss Tamnil : ஒரு லவ்வர் கிடைக்கும்னுதான் பிக்பாஸ் போனேன்!. தர்ஷா குப்தா சொல்றத கேளுங்க!..
Darsha gupta: கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா பெங்களூரில் ஆசிரியையாக பணியாற்றியவர். பெங்களூரில் இருந்தபோது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்தார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நடிகை ஆக வேண்டும் என்கிற ஆசை அவரிடம் இருந்தது. இதற்காக சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.
ஆனால், நினைத்தது நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால, அதை விட வெண்ணக் கட்டி உடம்பை விதவிதமாக காண்பித்து போஸ் கொடுத்து போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ஆனாலும், பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை. அதன்பின் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கொஞ்சம் பிரபலமானார். அந்த நிகழ்சிக்கு பின் 2 படங்களில் நடித்தார்.
மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடித்தார். ஆனால், தர்ஷா ஓவர் ஆக்டிங் செய்ததாக விமர்சனம் எழுந்தது. அதன்பின் சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ‘ஓ மை கோஸ்ட்’ படத்திலும் நடித்தார். ஆனால், இந்த 2 படங்களுமே ஓடவில்லை. எனவே, தர்ஷாவுக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி அதன்மூலம் சினிமாவில் வாய்ப்பு வரும் என கணக்கு போட்டார். ஆனால், ரசிகர்களை கவரும்படி அவர் நடந்து கொள்ளவே இல்லை. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேஷன் செய்யப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் பெண் போட்டியாளர் இவர்தான். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசியுள்ள தர்ஷா ‘வெளியே எனக்கு லவ்வர் யாருமில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு போனால் அங்கு ஒரு லவ்வர் கிடைத்து அது கல்யாணம் வரை போகும் என நினைத்தேன்.. ஒரு லவ்வர் இருந்திருந்தா ஜாலியா விளையாடி கப்ப ஜெயிச்சிருப்பேன்’ என சோகமாக கூறியிருக்கிறார்.