இலங்கை தமிழர் உண்ணாவிரதத்தில் விஜய் அளித்த நன்கொடை… எம்புட்டு பெரிய தொகை? வறுக்கும் ரசிகர்கள்!

Published on: November 7, 2024
---Advertisement---

Actor vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து முதல் மாநாட்டை அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். தனது கொள்கை, கோட்பாடுகளை அவர் அறிவித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் விஜய் குறித்த பல்வேறு தகவல்களும் வைரலாகி வருகின்றன.

இந்தநிலையில் இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் அவர் அளித்த நன்கொடை விவரங்கள் தெரிய வந்துள்ளன. இதில் நடிகர் சிம்பு ரூபாய் 2 லட்சமும், மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா ரூபாய் 25,000 ஆயிரமும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான தொல்.திருமாவளவன் ரூபாய் 50,000 ஆயிரமும் நன்கொடை அளிக்கின்றனர்.

அப்போது நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக ரூபாய் 500 நன்கொடையாக அளிக்கிறார். இந்த வீடியோ ட்விட்டரில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த காலகட்டத்தில் சிம்புவை ஒப்பிடும்போது விஜய் வளர்ந்து விட்ட நடிகர். அவரை விட அதிகம் கொடுக்காவிட்டாலும் அவரின் அளவிற்காவது கொடுக்க வேண்டாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை மாநாடு நடத்திய அரசியல் கட்சிகள் மாநாட்டிற்கு வருகை புரியும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் என அத்தியாவசிய தேவைகளை வழங்கி தான் மாநாடு நடத்தி உள்ளனர். ஆனால் வெட்ட வெயிலில் கூடிய ரசிகர்கள், தொண்டர்களுக்கு உணவோ, தண்ணீரோ அளிக்காமல் மாநாடு நடத்திய முதல் கட்சி என்ற பெருமை தமிழக வெற்றிக் கழகத்தையே சேரும்.

மேற்கண்ட இரு சம்பவங்களையும் வைத்து பார்க்கும்போது விஜய் அன்றும், இன்றும் அதிகம் செலவு செய்யாமல் அரசியலில் வெற்றி பெறத்தான் ஆசைப்படுகிறார் போல.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment