Biggboss Tamil 8: பிக் பாஸ் 8 டைட்டிலை வெல்லப்போவது இந்த பிரபலம் தானா..? அதற்குள்ள முடிவாயிடுச்சா..!

Published on: November 7, 2024
---Advertisement---

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 27 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே தெரிந்து விடுகின்றன. மறுபுறம் நிகழ்ச்சியின் டிஆர்பியை தக்க வைக்கும் அளவிற்கு போட்டியாளர்கள் யாரும் இன்னும் கேமிற்குள் வரவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் முத்துக்குமரன், ஜாக்குலின் என ஆண்கள் அணியில் ஒருவரும் பெண்கள் அணியில் ஒருவரும் மட்டுமே பிக்பாஸிற்கு ஓரளவாவது கண்டெண்ட் அளிக்கின்றனர். இதனால் நொந்து போன பிக்பாஸ் மொத்தமாக ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களை இறக்கி இருக்கிறார்.

இவர்கள் நாளை நிகழ்ச்சிக்கும் என்ட்ரி ஆவார்கள் என தெரிகிறது. இந்த சூழ்நிலையில் இந்த சீசனின் டைட்டிலை வெல்ல முத்துகுமரனுக்கு அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுவரை நடந்த ஏழு சீசன்களிலும் ஆங்கிலத்தில் ARM என்ற வரிசையில் ஆரம்பிக்கும் நபர்கள் டைட்டில் வென்றுள்ளனர். இது தொடர வேண்டும் என்றால் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே செல்ல இருக்கும் ரானவ், ராயன் இருவரில் ஒருவரை டைட்டிலை வெல்ல வேண்டும்.

ஆனால் அர்ச்சனா போல வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து டைட்டிலை வெல்லக்கூடிய அளவிற்கு மேற்கண்ட இருவரும் கண்டெண்ட் அளிப்பார்களா? என்பது தெரியவில்லை. எனவே நாம் சற்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment