கவின் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ப்ளடி பெக்கர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்க சிவபாலன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கவின் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார். படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி இப்படி சொல்கிறார்.
உழைக்காமப் பிச்சை எடுத்து சாப்பிடணும்னு குறிக்கோள்ல உள்ள கதாநாயகன். அவன் கூட ஒரு பையன் இருக்கான். அவனுக்கு உழைச்சித்தான் சாப்பிடணும்கற குறிக்கோள். கதாநாயகன் ஒரு பெரிய பங்களாவை சுத்திப்பார்க்கணும்னு ஆசைப்படறான். அந்த பங்களாவுக்குள்ள போனதும் அவனால வெளிய வரமுடியல.
அங்கு ஒரு கூட்டமே அந்தப் பங்களாவை பிரிச்சி அந்;த சொத்தைப் பங்குபோட ரெடியாகிக்கிட்டு இருக்கு. இவனும் அதுல ஒருத்தனா போய் வெளிய வரமுடியாம சிக்கிக்கிடறான். அப்புறம் தப்பிச்சாரா? பங்கு கிடைச்சுதாங்கறது தான் கதை.
இது ஆதிகாலத்து கதை. 1970-90 வரை நிறைய மசாலா கதைகள் இருக்கு. இதே மாதிரி ரஜினியே 20 படங்கள் நடிச்சிருக்காரு. கவின் இந்தப் படத்துல விக்ரம் நடிச்ச பிதாமகன் மாதிரி நடிச்சிருக்காரு. பிச்சைக்காரங்க அப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க. கூட நடிக்கிற சின்னப் பையன் அபாரமா நடிச்சிருப்பான்.
மத்தவங்க எல்லாம் இந்திக்காரங்க மாதிரி நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல வர்றது பேயா, நரியான்னு தெரியல. இது காமெடியா, திரில்லரான்னு இயக்குனருக்கும் தெரியல. நமக்கும் தெரியல. தியேட்டர்ல படம் பார்க்கும்போது பலரும் சிரிக்கிறாங்க. ஏன்னா இப்படி எல்லாம் படத்தை எடுத்து நம்மைக் கொல்றாங்களேன்னு சொல்றாங்க. படத்துல ராதாரவியே தேவையில்லை.
படமே குழப்பம் தான். உழைக்கிறவன் ஏன் பிச்சைக்காரனா மாறிடுறான்? அவன் எப்படி பிச்சை எடுக்க முடியும்? இது மாதிரி எதுவுமே லாஜிக் இல்லாம இயக்குனர் இயக்கிருக்காரு. உழைக்கிறவங்க பிளாட்பார்ம்ல உள்ளவங்க துயரத்தைக்கூட சொல்லல. பிச்சைக்காரனோட பிரச்சனையையும் சொல்லல. கவின் சூப்பரா நடிச்சிருக்காருன்னு தான் சொல்றாங்க.
கர்மா என்ற விஷயத்தைச் சொல்றாங்க. கர்மா தொடர்பான படமும் இல்லை. பிச்சைக்காரனா இருந்தா அவங்களுக்கு எல்லாம் அந்தக் கர்மா தானான்னு எந்தவித விஷயமும் இல்லை. கர்மா கர்மான்னு சொல்றாங்க. ஆனா இது கர்மம்… கர்மம்னு படம் பார்த்துட்டு வெளிய வர்றவங்க சொல்றாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
