பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய அமரன்!.. முதல் நாள் வசூல் மட்டும் இவ்வளவு கோடியா?!..

Published on: November 7, 2024
---Advertisement---

Amaran: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள திரைப்படம்தான் அமரன். இது இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த உண்மை கதை. ராணுவத்தில் உயர் பதிவியை பெற்று தீவிரவாதிகளுடன் போரிடும்போது மரணமடைந்த முகுந்த் வரதராஜனின் வீர தீர செயல்களை அமரன் படத்தில் காட்சி படுத்தியிருக்கிறார்கள்.

நிஜ ராணுவ வீரரின் கதை என்பதால் சிவகார்த்திகேயன் மிகவும் மெனக்கெட்டு, சின்சியராக நடித்துள்ளார் என்பது படத்தின் டிரெய்லரை பார்க்கும்போதே தெரிந்தது. இந்த படத்தில் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபகா வர்கீஸ் வேடத்தில் சாய்பல்லவி நடத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காஷ்மீர் பகுதியில் முகுந்த் வரதராஜன் சென்ற இடங்கள், அவர் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய இடங்கள், அவரின் ராணுவ முகாம்கள் என எல்லா இடத்தில் சிறப்பு அனுமதி பெற்று இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தீபாவளி விருந்தாக இந்த படம் நேற்று உலகமெங்கும் வெளியானது.

இந்த படத்திற்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் சிறப்பான ஆன்லைன் முன்பதிவு இருந்தது. சமீபத்தில் எந்த படத்திற்கும் இவ்வளவு வரவேற்பு இல்லை என சொல்லுமளவுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. எனவே, இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருந்தது.

இதைத்தொடந்து, உலகம் முழுவதும் அமரன் படம் முதல் நாளில் 23 கோடி வர வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்து 3 நாட்களும் தொடர் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. அமரன் படத்தோடு கவினின் பிளடி பெக்கரும், ஜெயம் ரவியின் பிரதர் படமும் வெளியானது.

இதில், அமரன் படமே அதிக வசூலை பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் இந்த படத்திற்கு சிறந்த புரமோஷனும் செய்யப்பட்டது. எனவே, இந்த படம் எப்படியும் 100 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment