Connect with us

Cinema News

தளபதிக்காக தல செய்ய இருக்கும் சம்பவம்… விஜய் மாநாட்டில் ஷாலினி அஜித்?…

விஜய் அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது

TVK: நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் நிலையில் கலந்து கொள்ள இருக்கும் விஐபிகள் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கோடிக்கணக்கான சம்பளத்தை உதறிவிட்டு தற்போது அரசியலுக்குள் கால் பதிக்க இருக்கிறார். இந்த வருடத்தின் துவக்கத்தில் தன்னுடைய அரசியல் கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார்.

இதை தொடர்ந்து அவருடைய முதல் மாநில மாநாடு எங்கு எப்போது நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது. பல மாவட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு பல இடங்கள் ஆராயப்பட்டு கடைசியில் விக்கிரவாண்டியில் தற்போது நாளை அக்டோபர் 27ஆம் தேதி மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

மற்ற கட்சிகளைப் போல இல்லாமல் முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜயின் பேச்சை கேட்கவே குடும்பமாக பலரும் மாநாட்டிற்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுற்று வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஹோட்டல்களும் ஹவுஸ் புல் ஆகியிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாகவே விக்கிரவாண்டிக்கு செல்ல இருப்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆதரவு அவருக்கு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டில் முதல் வரிசையில் விஐபிகள் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதில் ஆச்சரியப்படும் வகையில் மாநாட்டிற்கு நடிகை மற்றும் பிரபல நடிகர் அஜித்தின் மனைவியும் ஆன ஷாலினி அஜித் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் தனக்கு போட்டியாக இருந்தாலும் விஜயின் இந்த முடிவிற்கு அஜித் தரப்பு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொடங்கிய பின்னர் விஐபிகள் பலரின் வீடியோ வாழ்த்துக்களும் மேடையில் ஒளிபரப்பப்பட இருக்கிறதாம். அதில் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்ளிட்ட பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading

More in Cinema News

To Top