Connect with us

Cinema News

‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த LCU பிரபலம்… இவரு வில்லாதி வில்லன் ஆச்சே…!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பட் அக்லி திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித். வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் நடிகர் அஜித் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார்.

அந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் அதற்கு அடுத்து அவரின் எந்த திரைப்படமும் திரைக்கு வரவில்லை. துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை எடுக்கப்பட்டு வருகின்றது. படம் ஆரம்பித்தது முதலே பல பிரச்சினைகள் ஏற்பட்டது. நிதி பற்றாக்குறை, ஷூட்டிங் பிரச்சனை என்று தொடர்ந்து படப்பிடிப்பு காலதாமதமாகி தற்போது தான் நிறைவு பெற்றுள்ளது.

இதற்கிடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார். குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து வரும் ஒவ்வொரு அப்டேட்டும் அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஒரு கட்டத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தையே அஜித் ரசிகர்கள் மறந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். முதலில் இந்த படத்தில் இருந்து வெளிவந்த நடிகர் அஜித்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்று கூறி வந்தார்கள்.

ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் அஜித்தின் போஸ்டர்களை வெளியிடுவதை படக்குழு நிறுத்திவிட்டாலும், படப்பிடிப்பு தளத்திலிருந்து அஜித்குமாரின் நியூ லுக் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வபோது வந்து கொண்டு தான் உள்ளது. இதுவரை அஜித்தை நாங்கள் இப்படி பார்த்ததே இல்லை என்று ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவரின் கெட்டப் இருந்தது. இந்த திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான எந்த தகவலும் வெளிவரவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் பிரசன்னா இந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று தெரியவந்தது. இந்நிலையில் தற்போது புதிய வில்லன் ஒருவர் இந்த திரைப்படத்தில் களமிறங்கி இருக்கின்றார். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் இவர் இருப்பார். அவர் வேறு யாருமில்லை நடிகர் அர்ஜுன் தாஸ் தான். அவர் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அவரே தெரிவித்து இருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது ‘நான் முதன்முதலாக சினிமா வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது அஜித் சாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா சார் தான் அவர் டீமில் வேலை செய்யும் வாய்ப்பை கொடுத்தார். அதன் மூலம் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

அஜித் சாருடன் நெருங்கி பழகி இருக்கிறேன். அவருடன் சூட்டிங் செல்வது, படம் பிரமோஷன்களில் ஈடுபடுவது, படங்களுக்கு மார்க்கெட்டிங் செய்வது போன்ற வேலைகளை செய்துள்ளேன். வீரம் படத்தின் டீசரை அப்லோட் செய்ததே நான் தான். என்னை ரசிகர்கள் பல முறை நான் எப்போது அஜித் சாருடன் இணைந்து பணியாற்ற போகிறேன் என்று கேட்பார்கள். அவர்களுக்கு இப்போது பதில் கூறுகிறேன். குட் பேட் அக்லி திரைப்படத்தில் நான் நடிக்கின்றேன்’ என்று கூறியிருந்தார். அர்ஜுன் தாஸின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top