Connect with us

Cinema News

வில்லன் நடிகரை தியேட்டரிலேயே புரட்டி எடுத்த பெண்… என்னா அடிங்கிறீங்க… வைரல் வீடியோ..!

‘லவ் ரெட்டி’ படக்குழு தியேட்டருக்கு விசிட் அடித்தபோது படத்தின் வில்லன் நடிகரை படம் பார்த்த பெண் ஒருவர் அடித்த வீடியோ.

அன்றைய காலத்தில் தான் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உண்மையான குணமே அது தான் என்று நினைத்துக் கொண்டு அவர்களை வசைப்பாடும் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆனால் இன்றளவும் அதில் மாற்றம் ஏற்படவில்லை என்பதுதான் பலருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. சினிமாவில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்களை பார்த்து அதுதான் அவர்களின் உண்மையான குணம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

படங்களை நிஜம் என்று எண்ணும் ரசிகர்கள் கூட்டம் இன்னும் இருக்கின்றது. அப்படி திரையில் தோன்றிய வில்லன் நடிகர் படத்தில் காதலர்களை பிரித்த ஆத்திரத்தில் பெண்மணி ஒருவர் அவரை தியேட்டரில் பார்த்ததும் அடி வெளுத்து வாங்கி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி லவ் ரெட்டி என்கின்ற தெலுங்கு படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஸ்மரன் ரெட்டி என்பவர் இயக்கி இருந்தார். மேலும் ஷவானி அஞ்சன், ராமச்சந்திரா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. படம் தற்போதும் ஹவுஸ்புலாக ஓடிக்கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்ததால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

மேலும் இப்படத்தில் நடித்திருந்த நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்கள் என்று ரசிகர்கள் பாராட்டி வந்தார்கள். அதிலும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் என்டி ராமசாமி நடித்திருந்தார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். கோலாரில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ரசிகர்களுடன் இணைந்து படகுழுவினர் படத்தை பார்த்தார்கள்.

பின்னர் திரையரங்கில் இவர்களை பார்த்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பலரும் இவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டத்திலிருந்து ஓடி வந்த பெண்மணி ஒருவர் என்டி ராமசாமியை நோக்கி தாக்கினார். பளார் பளார் என்று அறைந்தார். இதை பார்த்த படக்குழுவினர் அனைவரும் அந்த பெண்ணை தடுத்து அவரை இழுத்துச் சென்றார்கள்.

மேலும் ராமசாமியை அடிக்கும் போதெல்லாம் அவர் ‘அவர்களை ஏன் சேர விடமாட்டாய்?’ என்று கூறிக் கொண்டே அடித்தார். இந்த வீடியோ இணையதள பக்கங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அந்தப் பெண்மணி எதற்காக என்னை அடிக்கிறார் என்பதை புரியாமல் நடிகர் என்டி ராமசாமி திகைத்து போனது மட்டுமில்லாமல் பட குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top