பசங்களோட லவ் எப்படி இருக்கு? அழகு பத்தி சாய்பல்லவி சொல்றதைப் பாருங்க

Published on: November 7, 2024
---Advertisement---

அமரன் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்தப்படத்தின் புரொமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில் பிரபல சினிமா விமர்சகரும், நிகழ்ச்சித் தொகுப்பாளருமான கோபிநாத் சாய்பல்லவியை பேட்டி எடுக்கிறார். அப்போது சாய்பல்லவி சொன்ன சில சுவாரசியமான விஷயங்கள்.

இப்பல்லாம் பசங்க நல்ல வர்ணிக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்னாடி ஒருத்தரைப் பிடிச்சிருக்குன்னா ‘ஐ லைக் யு’ மட்டும் தான் சொல்வாங்க என்கிறார் சாய்பல்லவி.

‘பொண்ணுங்க வந்து அழகா இருக்கேன்னு சொன்னா நம்புவேன்… அவங்க சொன்னா கரெக்டா இருக்கும். அவங்க ரொம்ப யோசிச்சி சொல்வாங்க. அதனால அதை நம்பலாம். பசங்களுக்கு எல்லா பொண்ணுங்களுமே அழகாத் தான் தெரிவாங்க’ன்னு சொல்றாரு சாய்பல்லவி.

அதுக்கு ஆங்கர் கோபிநாத் ‘பசங்க எப்படின்னா பொண்ணுங்க அழகா இருக்கான்னு சொன்னாலும் நம்புவாங்க. பாய்ஸ் சொன்னாலும் நம்புவாங்க’ன்னு சொன்னார். அதற்கு சாய்பல்லவி ‘கிடையவே கிடையாது. எதாவது எடுத்துட்டுப் போகப்போறான்னு இருக்கும்.

இந்த சட்டை நல்லாருக்குன்னு சொன்னா அடுத்து உங்க மேல அந்த சட்டை இருக்காதுன்னு அர்த்தம்’ என்று சிரிக்கிறார். அதற்கு கோபிநாத் நாம இப்போ ரிவர்ஸ் அடிப்போம். கேர்ள்ஸ் ஒரு பையனை அழகா இருக்கான்னு சொல்றாங்க.

‘அவங்களுக்குப் பிடிச்ச பிரண்ட்ஸ் எல்லாரும் அழகா இருக்காங்கன்னு சொல்லிடுவாங்களா என்ன’ன்னு கேட்கிறார். அதற்கு ‘கேர்ள்ஸ் வந்து கிரிட்டிகல். அவங்க ஒரு விஷயம் ரொம்ப யோசிச்சி இது தான் அழகுன்னு சொல்வாங்க. அதனால அதை நம்பிடணும்’னு சொல்லி சிரிக்கிறார் சாய்பல்லவி.

அமரன் படத்தில் சாய்பல்லவி தைரியமான பெண்மணி வேடத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் நடித்துள்ளார். சாய்பல்லவி அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரக்டரில் நடித்து அசத்தியுள்ளார். இது உண்மைக்கதை என்பதால் இருவரும் கேரக்டர்களாகவே மாறிவிட்டனர். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பான நடிப்பை நடித்துள்ளனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment