Connect with us

Flashback

தயாரிப்பாளருடன் கைகலப்பு… படம் பண்ண மாட்டேன்னு புறப்பட்ட இயக்குனர்… சாமர்த்தியமாக பேசிய ரஜினி!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் பைரவி. இந்தப் படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும், தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு அந்தப் படத்தில் தனது தந்தைக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே நடந்த மனக்கசப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பைரவி படம் எடுக்கும்போது ஒரு சின்ன செட்டப் சீன். அதுல பின்னால இருக்குற ஜன்னலை உடைச்சிட்டு ரஜினி சார் அதுல ஏறிக்குதிச்சி பயங்கரமா ஓடுவாரு. அதுக்கு அப்பா சிம்பாலிக்கா ஒரு ஷாட் கட் பண்ணுவாங்க. அதற்காக வெள்ளைக் குதிரை ஒண்ணு தறிகெட்டு ஓடுற மாதிரி எடுக்கணும்னு நினைச்சி தயாரிப்பாளர்கிட்ட வெள்ளைக்குதிரை ஒண்ணு கேட்டாரு.

அதற்கு ‘அதெல்லாம் தர முடியாது. வெறும் காலால ரஜினி ஓடுனா போதும்னு சொல்லிட்டாராம். பட்ஜெட் இவ்ளோ தான் இருக்கு. இதை வச்சி எடுங்க’ன்னு எல்லாரு முன்னாடியும் சொல்லிட்டாரு.

அப்பா என்ன தான் இருந்தாலும் அப்பவே ஒரு லெஜண்ட் டைரக்டர் ஸ்ரீதர் சாருக்கிட்ட ஒர்க் பண்ணினவரு. அப்பவே எம்.ஏ. படிச்சவரு. அவரு ஒரு கிரியேட்டர். ஏனோதானோன்னு பட வாய்ப்பு கிடைக்காம வரல. ரொம்ப இன்டலிஜண்ட்டா திங் பண்ணுவாரு. அதனால அப்பாவுக்கு உடனே கோபம் வந்துடுச்சு. அந்த இடத்திலேயே அப்பாவுக்கும், புரொடியூசருக்கும் சின்ன கைகலப்பு வந்துடுச்சு.

அப்போ அப்பா இனிமே இந்தப் படத்தைப் பண்ண மாட்டேன்னு கார் ஏறி வீட்டுக்கு வந்துட்டாரு. அதனால ஒரு வாரமா அந்தப் படம் எடுக்க முடியாம சூட்டிங் நின்னு போச்சு. அப்போ ரஜினி சார் தலையிட்டு, ‘சார் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டீங்க. அது வேற விஷயம். ஆனா இதுல என்னோட கேரியரும் இருக்கு சார். நீங்க தானே எனக்கு நம்பிக்கை தாரேன்.

சக்சஸ் கொடுக்குறேன்னு சொல்லி நடிக்க வச்சீங்க. நீங்க படம் பண்ணலன்னு சொன்னா என்னோட லைஃப் சஃபர் ஆகிடும்ல’ன்னு சொல்லி கேட்டாரு. அப்புறம் அப்பாவுக்கும் அது நியாயமா பட்டது. உடனே படத்தை இயக்கிக் கொடுத்தாரு. படம் முடியுற வரைக்கும், அப்பாவுக்கும், தயாரிப்பாளருக்கும் சின்ன மனக்கசப்பு இருந்தது.

கடைசியா பேமெண்ட் கொடுக்கும்போது கூட அப்பா கோபத்துல வாங்கிட்டு வந்ததா தயாரிப்பாளர் ஒரு பேட்டியில சொன்னாரு. இது என்னாச்சுன்னா அப்பா ரொம்ப கோபக்கார டைரக்டர். புரொடியூசருக்கும் பிரச்சனைன்னு பரவலா பேச்சு வர ஆரம்பிச்சது. இதனால அப்பாவுக்கு அடுத்த பட வாய்ப்பு வரல. இனிமே டைரக்ட் பண்ணனும்னா தனியா தான் தயாரிக்கணும்னு நினைச்சி முடிவு எடுத்தாரு. அப்படி வந்தது தான் ஆஸ்கர் மூவீஸ். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1978ல் எம்.பாஸ்கர் இயக்க, கலைஞானம் தயாரிப்பில் வெளியான படம் பைரவி. ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்து இருந்தனர். கதாநாயகனாக நடித்த முதல் படமே ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்தது.

Continue Reading

More in Flashback

To Top