Connect with us

Cinema News

இந்த வாரம் ஃபன் கியாரண்டி… ஓடிடியில் வெளியாகும் முக்கிய படங்கள்..

ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் தொகுப்புகள்

OTT Tamil: தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது திரையரங்கில் வெளியாகும் திரைப்படத்தை விட ஓடிடி படங்களுக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் வெளியான திரைப்படம் கடைசி உலக போர். ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட்டில் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் ஆதி, நாசர், நடராஜன், அனகா, என்.அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படம் பிரைம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கோழி பண்ணை செல்லத்துரை. இப்படத்தில் புதுமுக நடிகரான ஏகன், பிரிகிடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வந்தது.

இப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. குழந்தைகளின் போட் கேமை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வெப் சீரிஸ் ஸ்நேக் அண்ட் லேடர். இப்படம் 9 எபிசோட்களை மையமாக கொண்டது. பிரைம் ஓடிடியில் இந்த வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top