Connect with us

throwback stories

தேவாவுக்கு ராமராஜன் கொடுத்த சூப்பர் ஐடியா…! மனுஷன் கைராசி அப்படியே பாப்புலராகிட்டாரே..!

இப்படி ஒரு ஐடியாவை ராமராஜன் தான் கொடுத்தாரா என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

தமிழ்த்திரை உலகில் கானாவை அறிமுகப்படுத்தியவர் தேனிசைத் தென்றல் தேவா தான். இவரது குரலும் அருமையாக இருக்கும். இவர் பாடும் கானா பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். அதிலும் வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாடலை இப்போது கேட்டாலும் நம்மை ரசிக்க வைக்கும்.

அண்ணாமலை படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஸ்டைலான டைட்டில் கார்டு மியூசிக் போட்டது இவர் தான். அதில் இருந்து தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற டைட்டில் கார்டு ‘சொர்… சொர்…’னு திரையில் வர ஆரம்பித்தது. அப்பேர்ப்பட்ட மாஸான இசைக்குச் சொந்தக்காரர் தான் தேனிசைத் தென்றல் தேவா.

ஆனால் இவருக்கே மக்கள் நாயகன் ராமராஜன் ஒரு விஷயத்தில் ஐடியா கொடுத்துள்ளார். அது என்னன்னு தேவாவே சொல்றாரு பாருங்க. வைகாசி பொறந்தாச்சு படம் பண்ணும்போது முதல்ல என்னுடைய பெயர் ‘சி.தேவா’ என்று தான் இருந்தது. ராமராஜன் சார் தான், ‘அண்ணே வெறும் தேவான்னு வைங்க. அந்த ‘சி.’ உங்களை கீழே இறக்குது’ன்னு சொன்னாரு.

அப்புறம் வைகாசி பொறந்தாச்சு மிகப்பெரிய ஹிட் ஆச்சு. அப்பொல்லாம் என்ன யாருக்கும் தெரியாது. நான் டீ குடிக்க போனா கடையில ‘சின்ன பொண்ணு’தான் பாட்டைப் போடுவாங்க. வைகாசி பொறந்தாச்சு என்னைப் பெரிய லெவலுக்குக் கொண்டு போச்சு என்கிறார் தேனிசைத் தென்றல் தேவா.

ராதா பாரதியின் இயக்கத்தில் பிரசாந்த் அறிமுகமான படம் வைகாசி பொறந்தாச்சு. அறிமுக நடிகை காவேரி ஜோடியாக நடித்தார். இவர்களுடன் சுலக்சனா, சங்கீதா, கே.பிரபாகரன், ஜனகராஜ், சார்லி, சின்னி ஜெயந்த், குமரிமுத்து, கொச்சின் ஹனிபா உள்பட பலர் நடித்தனர். தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட்.

சின்ன பொண்ணுதான், பள்ளிக்கூடம், கண்ணே கரிசல்மண்ணு, வாழ மரம், நீலக்குயிலே, தண்ணிக்குடம், இஞ்சி இடுப்பழகி, தத்தளாங்கு ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன. அந்தக் கால இளம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வகையில் பிரசாந்துக்கு முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in throwback stories

To Top