கதையை கேட்டு கதறி அழுத திரிஷா!.. எப்பவுமே அது ஒரு செம ஃபீல் குட் மூவிதான்!…

Published on: November 7, 2024
---Advertisement---

Trisha: தமிழ் சினிமாவில் தன்னுடைய ஆதிக்கத்தை இன்றளவும் விட்டு கொடுக்காமல் இருப்பவர் நடிகை திரிஷா. அவர் ஒரு படத்தை அத்தனை எளிதில் ஒப்புக்கொள்ளவே மாட்டாராம். அவரை ஒரு இயக்குனர் அழுக விட்ட சம்பவமும் நடந்து இருக்கிறது.

மிஸ் சென்னையாக பட்டம் வென்ற பின்னர் நடிகர் திரிஷா முதல் முறையாக ஜோடி திரைப்படத்தில் ஒரு சின்ன காட்சியில் கேமியோ ரோல் செய்திருப்பார். அதன் பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் முன்னணி நடிகையாக நடித்திருப்பார்.

முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு அவருக்கு குவிந்தது. அந்த சமயத்தில் அவர் நடிகர் விக்ரமுடன் சாமி படத்தில் இணைந்து நடித்திருப்பார்.

அந்த படம் தான் நடிகர் திரிஷாவின் கேரியரை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது. தமிழ் சினிமாவின் டாப் நாயகர்களான விஜய் மற்றும் அஜித்துடன் ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து அவருடைய காதல் விவாகரத்தால் வாய்ப்புகள் சரிந்தது.

இருந்தும் கதையின் நாயகியாக சில படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார் திரிஷா. ஆனால் அவருக்கு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு எண்ட்ரி கிடைத்தது. இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுண்டை தொடங்கினார்.

வரிசையாக லியோ, விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நாயகியாகி இருக்கிறார். பொதுவாக திரிஷாவின் வெற்றி படங்களை பட்டியலிட்டால் அதில் 96 படத்துக்கும் முக்கிய இடம் இருக்கும். அந்த படத்தின் கதையை சொல்லப்போன இயக்குநர் பிரேமிடம், `20 நிமிடங்கள் மட்டும் சொல்லுங்க போதும்’ என்றாராம் த்ரிஷா.

`முழுமையாக கேட்டிருங்க’ என்று சொல்லி கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் பிரேம் கதை சொல்லியிருக்கிறார். ஃபர்ஸ்ட் ஹாஃப் கதை கேட்டதும் த்ரிஷாவுக்குப் பிடித்துவிட்டதாம். முழுக் கதையையும் கேட்டுவிட்டு கண்கலங்கிய அவர், உடனடியாக நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம். அப்படமும் திரிஷாவின் கேரியரில் சூப்பர்ஹிட்டானது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment