பல லட்சம் கொடுத்து அனிருத் புரமோஷன் செய்த பாட்டு அது!.. பிரபலம் பகீர் தகவல்!…

Published on: November 7, 2024
---Advertisement---

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் அந்த மாதிரி செய்ய மாட்டாரு. அப்படின்னா இன்னைக்குப் பத்து கோடி சம்பளம் வாங்குறாரு. புரொமோஷனுக்கு எவ்ளோ செலவு பண்ணுவாரு? யுவன் பணத்தால பாதிக்கப்படலை. ஆனா மனதால் பாதிக்கப்பட்டுள்ளார்.கடந்த 5 ஆண்டுகள்ல வர்ற படங்களில் பாடல்களை நம்மால் தொடர்ச்சியாகக் கேட்க முடியலை.

அந்தக் காலகட்டத்துல மட்டும் தான் கேட்க முடியுது. அப்புறம் மறந்துடறோம்னும் யுவன் பேசியுள்ளார். இசை அமைப்பாளர் பரணியும் இதே கருத்தைத் தான் சொல்றாரு. இன்னைக்கு பாட்டை புரொமோஷன் பண்றதுக்கு நிறைய ஏற்பாடு பண்றாங்கன்னு சொல்றாரு. ஆனால் இன்னைக்கு பெய்டு புரொமோஷன் பண்ற அளவுக்கு யுவன் பேசியிருக்காரு.

அவரு பொதுவெளியில அது மாதிரி பேசினது இல்லை. இதுக்கு சமீபத்துல வந்த கோட் படத்துல ஏதாவது பிரச்சனையா என பார்க்க வேண்டியுள்ளது. ஏன்னா கோட் படத்துக்கு யுவன் மாதிரியும் இசை இல்லை. அனிருத் மாதிரியும் இசை இல்லை. இரண்டும் கலந்தமாதிரி இருக்கு. ஒரு பாட்டைத் தவிர மற்ற எதுவுமே யுவனின் வடிவம் கிடையாது.

இன்று அதிக புரொமோஷன்ல இருக்குறது அனிருத். இவர் ஆரம்பத்துல முதல் பாட்டுக்கே 25 லட்சம் கொடுத்து புரொமோஷன் பண்ணினாராம். அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியல. அப்போ பத்து வருஷத்துக்கு முன்னாடி. அப்போ அதுவே பெரிய தொகை. இது கார்ப்பரேட் காலம். வலிந்து திணிக்கிறது. என்னோட பாட்டு நல்லாருக்கோ, நல்லாலையோ கேட்டே ஆகணும்.

ரஜினி இருக்குற வரைக்கும் அனிருத்துக்கு புரொமோஷன் பண்ணுவாங்களாம். அதனால அவரு படத்துக்கு புரொமோஷனைப் பார்த்து விஜய், அஜீத் படங்களுக்கும் பண்றாங்க. கண்ணதாசனின் வரிகள் தான் நினைவுக்கு வருது. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாதுன்னு சொல்வாரு. அந்த வகையில காலம் யாரை எங்கு கொண்டு போகுதுன்னு தெரியல என்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.

யுடியூப் சேனலுக்கு பணம் கொடுத்து அதிக வியூஸ் வாங்கி அதை ஹிட் பாடல் போல காட்டுகிறார்கள் என் சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சொல்லி இருந்தது உண்மைதான் போல!…

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment