Cinema News
பிச்சைக்கும் பெருமாளுக்கும் என்ன சம்பந்தம்? அதுக்காக இப்படியா ஒத்திகை பார்க்குறது?
பிச்சைக்காரன் வேஷம் போடுறதும் ஈசி. பிச்சை எடுக்குறதும் ஈசி. ஆனா அதுக்கு கொஞ்சம் இமேஜை உடைக்கணும்.
நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் படம் ப்ளடி பெக்கர். சிவபாலன் முத்துக்குமார் இயக்கி வருகிறார். இந்தப்படம் வரும் தீபாவளித் தினத்தன்று திரைக்கு வருகிறது. அதே நாளில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படமும் வெளியாகிறது.
ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் முதன்முறையாக தயாரிப்பாளர் ஆகிறார். ஜேன் மார்டின் இசை அமைத்துள்ளார். கவின் ஸ்டார் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டிஎம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷாத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ் சலீமா, ஆகாஷயா ஹரிஹன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுராபந்துலா, ரோகித் டேனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், ஸ்ரீசரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ப்ளடி பெக்கர் படத்துக்காக, நிஜமாகவே பிச்சைக்காரனுக்கு காசு வருமான்னு செக் பண்ணிப் பார்த்துள்ளார் நடிகர் கவின். இவர் அதற்காக பிச்சைக்காரனைப் போல வேடமிட்டு ஒரு அக்காக்கிட்ட போயிட்டு சாப்பிடல அக்கா சாப்பிட்டு ரெண்டு நாளாகுது.
சாப்பிட ஏதாவது கிடைக்குமான்னு கேட்டாராம். அதற்கு அவங்க உள்ள போயிட்டு வந்து 20 ரூபாயை எடுத்துக் கொடுத்தாங்களாம். அப்புறம் தான் ஓகே நாம வெற்றி தான்னு நினைச்சி சூட்டிங் போக முடிவு எடுத்தாராம் கவின்.
வரும் தீபாவளி திரைவிருந்தாக ப்ளடி பெக்கர், சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய 3 படங்களே உறுதியாக வருகிறது. அஜீத்தின் விடாமுயற்சி படம் தள்ளிப்போகிறதாம்.
இந்தப் படங்கள் மூன்றுமே கடும்போட்டியாக இருக்கும் சூழலும் உருவாகி உள்ளது. கவினா, சிவகார்த்திகேயனா, ஜெயம்ரவியான்னு பொறுத்திருந்து பார்ப்போம். மூவரும் இளம் கதாநாயகர்கள் என்பதால் போட்டி வலுவாகவே இருக்கும். எதுவாக இருந்தாலும் கதைதான் படத்தின் வெற்றியை முடிவு செய்யும்.
பேரைப் பார்த்தாலே பயங்கரமாகத் திட்டுவது போல இருக்கு. அதான் படம். இப்போ எல்லாம் யார் பேரைத் தமிழ்ல வைக்கிறாங்கற மாதிரி தான் சொல்ல வேண்டி இருக்கு.