Connect with us

Cinema News

அடுத்த படம் ஃபுல் எல்.சி.யூதான்!.. கைதி 2-வுக்கு ஹைப் ஏத்தும் லோகேஷ் கனகராஜ்!…

லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள ஒரு செய்தி அவரின் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Coolie: மாநகரம் திரைப்படம் மூலம் இளசுகளுக்கு பிடித்த இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் லோகேஷ் எடுத்துக்கொள்ளும் கதையும், அதற்கு அவர் அமைக்கும் திரைக்கதையும்தான். லோகேஷின் திரைமொழி ரசிகர்களை ஒரு பதட்டத்துடன் இருக்க வைக்கிறது. அந்த பதட்டம் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

அதனால்தான் லியோ படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாள் அதிக வசூல் பெற்ற படமாக இப்போதும் லியோ இருக்கிறது. மாநகரத்திற்கு பின் கைதி படம் எடுத்தார் லோகேஷ். ஒரு இரவில் நடக்கும் இந்த படத்தில் பிளாஷ்பேக் இல்லை. பாடல்கள் இல்லை.

அதன்பின் விஜயை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் ஆகிய படங்களை எடுத்தார். விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்கிற வேடத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் பெயரை வாங்கினார் சூர்யா. விக்ரம் படத்தில் கைதி கார்த்திக்கும் குரலும் ஒரு காட்சியில் வரும். இப்படி லோகேஷின் முந்தைய படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அவரின் மற்ற படங்களில் வருவதை லோகேஷின் ரசிகர்கள் எல்.சி.யூ என பெயர் வைத்தார்கள்.

அதாவது Lokesh Cinematic Universe என அழைத்தார்கள். லியோ படத்தில் கைதி படத்தில் ஒரு கதாபாத்திரம் வந்தது. ஆனால், லோகேஷ் இப்போது இயக்கி வரும் கூலி படத்தில் எந்த எல்.சி.யூ இருக்காது என ஏற்கனவே அவர் சொல்லிவிட்டார். இது ஒரு தனிக்கதை என சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் மாணவர்களை சந்தித்து உரையாடினார் லோகேஷ். அப்போது அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது. ‘ரத்தம், கத்திக்குத்து, துப்பாக்கி, வன்முறை இல்லாமல் ஒரு காதல் கதையை படமாக எடுப்பீர்களா?’ என்கிற கேள்விக்கு ‘இன்னும் 5 வருஷத்துக்கு அது முடியாது. அட்வான்ஸ் வாங்கிவிட்டேன்’ என சிரித்துகொண்டே சொன்னார் லோகேஷ்.

மேலும், கூலி படத்திற்கு பின் நான் எடுக்கவுள்ள படத்தில் ஃபுல் எல்.யூ.இருக்கும். இதற்கு முன் நான் எடுத்த படங்களில் வந்த எல்லா நடிகர்களும் அதில் இருப்பார்கள் என சொல்லி இருக்கிறார். கூலிக்கு பின் கைதி 2 படத்தைத்தான் எடுக்கவிருக்கிறார் லோகேஷ். எனவே, இந்த படம் லோகேஷ் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக அமையும் என்றே நம்பலாம்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top