Connect with us

Cinema News

திருமணம் குறித்து சிம்பு கொடுத்த புதுத்தகவல்… அவரு இல்லையாம்… வேற யார் எல்லாம் வெயிட்டிங்?

நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து வெளியான தகவல்

தற்போது சிம்பு கமலுடன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிம்பு குறித்தும், அவரோட திருமணம் குறித்தும் சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியானது. 2 வருஷமா நிதி அகர்வாலும், சிம்புவும் காதலிக்கிறாங்கன்னு செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இது 3 மாசம் அடங்கி இருக்கும். திரும்பவும் வெளிவருவதுமாக இருந்தது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் சொல்லும்போது, செய்தி அப்படித் தான் வருது. அதுக்கு அவர் பதில் சொல்லாததனால உண்மை இருக்குமோ என்கிற எண்ணம் எல்லாருக்கும் பிறக்குதுன்னு சொல்லி இருந்தார். உடனே சிம்பு வீட்டுல இருந்து நண்பர் ஒருவர் அவரை போனில் அழைத்தாராம்.

நீங்க பதில் சொன்னது ஆந்திராவில் இருந்து கிளப்பி விட்ட செய்தி. இவ்ளோ நாள் தமிழ்நாட்டுல சுத்துனது. இப்போ மெல்ல ஆந்திரா பக்கம் போய் அங்கேருந்து திரும்ப வர ஆரம்பிச்சிருக்கு. அந்த செய்தியில ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. சிம்பு உங்கக்கிட்ட சொல்லச் சொன்னாரு.

அது முழுக்க முழுக்க தவறான செய்தியாம் அப்படின்னாரு. எனக்கு சிம்புவோட அப்ரோச் ரொம்ப பிடிச்சதுன்னும் சித்ரா லட்சுமணன் அந்த வீடியோவில் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவரைப் பொருத்த வரை எல்லா விஷயத்திலும் இப்படி அப்ரோச் பண்ணுவாராம்.

காவிரி பிரச்சனையிலும் அப்படித் தான் இருந்தது. பொதுவாகவே எல்லா நடிகர்களும் இது மாதிரி உடனுக்குடன் சம்பந்தப்பட்டவர்களிடம் தப்பா இருக்கும்பட்சத்தில் சொல்லிவிட்டால் எல்லாருக்கும் ஒரு தெளிவு பிறக்கும் என்றும் சித்ரா லட்சுமணன் சொல்கிறார்.

சிம்பு இதற்காக ஒரு குழுவையே அமைத்துள்ளாராம். ஊடகங்கள் சொல்வதைக் கவனிப்பதற்கும், அதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்வதும் தான் அந்தக் குழுவோட வேலை. நிஜமாகவே அது நல்ல மூவ்மெண்ட் என்கிறார் சித்ரா லட்சுமணன். இப்போ சிம்புவோட வருங்கால மனைவி நிதி அகர்வால் இல்லை என்பது தெரிந்துவிட்டது. அந்த இடத்திற்கு வேறு யார் எல்லாம் காத்து இருக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top