ராஜ்கிரண் வில்லனா நடிக்காததுக்கு இதான் காரணமா? என்ன ஒரு டிசிபிளின்..!

Published on: November 7, 2024
---Advertisement---

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறன் கொண்டவர் ராஜ்கிரண். இவரது படங்கள் என்றாலே அதுல ஒரு மெசேஜ் இருக்கும். பொதுவாக கிராமத்துக் கதை அம்சமும், குடும்ப சென்டிமென்டுகளும் நிறைந்த படங்களைக் கொடுப்பதில் இவர் வல்லவர்.

இவருக்குத் தாய்மார்களின் பேராதரவு எப்போதும் உண்டு. சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்த மெய்யழகன் படத்திலும் அவருக்கு உரிய கேரக்டரை அழகாகச் செய்து இருந்தார். இவர் தான் நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தினார்.

அந்தக் காலகட்டங்களில் ராஜ்கிரண் படம் என்றாலே அது வெற்றிப்படமாகத் தான் இருக்கும். என் ராசாவின் மனசிலே படத்தில் மாயாண்டியாக வந்து கலக்கி விடுவார். இவரது பாடி லாங்குவேஜூம் அந்தக் கேரக்டரும் கனகச்சிதமாகப் பொருந்தி இருக்கும்.

அதே போலவே அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசா தான் படங்களும் மாஸாக இருக்கும். என்ன பெத்த ராசா படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகம் ஆனார். ராமராஜன் நடித்த இந்தப் படத்தைத் தயாரித்தவர் ராஜ்கிரண் தான். இயக்கியவர் சிராஜ்.

தவமாய் தவமிருந்து, கொம்பன், சண்டைக்கோழி, முனி, மஞ்சப்பை படங்களில் இவரது கேரக்டர்கள் பேசப்பட்டன. அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்தக் காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனது படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து விடுவார். அதே போல மது அருந்தும் காட்சிகளிலும் நடிக்க மாட்டார். வில்லன் வேடங்களிலும் நடிக்க மாட்டார்.

அவருடைய படத்தில் அப்படியே வில்லன் ரோல் ஏற்றால் மற்றொரு வேடம் ஹீரோவாகவும் அவரே பண்ணுவார். அவருக்கு என்று ஒரு கட்டுப்பாடு வைத்திருப்பார். அதே போல ராஜ்கிரணும் தனது படங்களில் வில்லனாக நடிக்கவே மாட்டார். அதற்கு என்ன காரணம்னு அவரே சொல்கிறார் பாருங்கள்.

தவமாய் தவமிருந்து படத்துக்கு அப்புறம் வில்லனாக நடிக்க 5 மடங்கு சம்பளம் தரேன்னு சொன்னாங்க. நான் திட்டி விட்டுட்டேன். என்னை எல்லாரும் அப்பா மாதிரி பார்க்கிறாங்க. நான் வில்லனா நடிச்சா எவன் பார்ப்பான்? நான் என்னோட சுயம் எப்படியோ அப்படிப்பட்ட கேரக்டரில் மட்டும் தான் நடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment