Connect with us

Cinema News

வேட்டையன் வேட்டையாடிட்டாரே! முதல் நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

வேட்டையன் படத்தோட முதல் நாள் வசூல் விவரம்

வேட்டையன் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. அந்த வகையில் படத்திற்குப் பாசிடிவ்வான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் வேட்டையன். ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், பகத்பாசில் உள்பட பலர் நடித்துள்ளனர்.

என்கவுண்டரை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 4 மணி காட்சி பெங்களூருவில் நடைபெற்றது. அங்கு போய் எப்டிஎப்எஸ் பார்த்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.

ரஜினியும், அமிதாப்பச்சனும் வரும் இடங்களில் எல்லாம் திரையரங்கில் கைதட்டல் காதைப் பிளக்கிறதாம். படத்தில் வசனங்கள் தான் பிளஸ் பாயிண்ட். அடுத்து அனிருத்தின் மியூசிக். ‘மனசிலாயோ’ பாடல் செம மாஸ். ரஜினியின் என்ட்ரியும், முதல் 25 நிமிடங்களும் படத்தின் முக்கியக் காட்சிகள். சிறப்பான வரவேற்பைப் பெற்றுத் தர இந்த மாஸ் காட்சிகளும் ஒரு காரணம்.

என்கவுண்டர் மட்டுமே போலீஸின் வேலை இல்லை. பாதுகாப்பும் முக்கியம். அதே போல கல்வியை வியாபாரம் ஆக்கக்கூடாது என இந்த இரண்டு விஷயங்களையும் கையில் எடுத்து அதை அற்புதமாக ஜனரஞ்சகத்துடன் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் த.செ.ஞானவேல். இவர் ஏற்கனவே ஜெய்பீம் என்ற சூப்பர்ஹிட் படத்தை சூர்யாவை வைத்து எடுத்தார். அது பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி இருந்தது.

வேட்டையன் படத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக வருபவர் துஷாரா விஜயன். இவரைச் சுற்றித் தான் கதையே நகர்கிறது. இவரைப் பார்த்து ரஜினிகாந்த் இன்னொரு விஜயசாந்தி என்றே பெருமையாகச் சொன்னாராம்.

ஜெயிலருக்குப் பிறகு ரஜினிக்கு அதே போல மாஸ் வெற்றியைக் கொடுக்கும் என்றும் அதை விட அதிகமாக 1000 கோடியை வசூலித்து சாதனை படைக்கும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா முழுவதும் நேற்று ஒருநாளில் மட்டும் 30 கோடியைக் கலெக்ஷன் பண்ணி இருக்கிறார் வேட்டையன்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top