Cinema News
கூலி படத்துக்கு கொட்டும் கோடிகள்!.. கலாநிதி மாறனையே கண்கலங்க வச்சிடுவாங்க போல!…
கூலி படத்துக்காக போட்டி போடும் நிறுவனங்கள்! சன் பிக்சர்ஸ் வச்ச செக்
தற்போது வேட்டையன் பரபரப்பில் ரஜினி இருந்து வருகிறார். நாளை வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தில் நடிக்கும் கலைஞர்கள் இயக்குனர் தச ஞானவேல் என அடுத்தடுத்து youtube சேனல்களில் பேட்டி கொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
ரஜினியின் நடிப்பில் கூலி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தான் கூலி. இந்தப் படமும் ஒரு பெரிய படமாக தான் உருவாக இருக்கிறது. பல பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
குறிப்பாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு கூலி திரைப்படத்தில் சத்யராஜ் இணைந்து இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் இந்த படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் .
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்திற்கான வியாபாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் ஓடிடி நிறுவனங்கள் பல முண்டியடித்துக் கொண்டு படத்தை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருவார்கள்.
அதைப்போல கூலி திரைப்படத்திற்கும் அமேசான் மற்றும் netflix போன்ற நிறுவனங்கள் படத்தை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர் .அதில் அமேசான் நிறுவனம் 175 கோடிக்கு படத்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அது மட்டுமல்ல கூலி திரைப்படத்திற்கு 175 கோடி மற்றும் ரஜினியின் அடுத்த படத்தையும் 175 கோடிக்கு வாங்குவதாகவும் amazon நிறுவனம் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறதாம் .
கூலிக்கு 200 கோடி மற்றும் ஜெயிலர் 2-வுக்கு 200 கோடி என இரண்டுக்கும் சேர்த்து 400 கோடி கொடுத்தால் படத்தை கொடுத்து விடுகிறோம் என பேரம் பேசி வருவதாக தெரிகிறது. படத்தில் இதுவரை நாகார்ஜூனா ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள்.
இன்னும் எந்தெந்த நடிகர்கள் நடிக்கப் போகிறார்கள் என்பதை பற்றி இனிமேல் தான் தெரியவரும். இந்தப் படமும் பெரிய அளவில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ்.
கமலை வைத்து விக்ரம் என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த லோகேஷ் ரஜினிக்கும் அப்படி மாதிரியான ஒரு படத்தைத் தான் கொடுப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.