Connect with us

இந்தி பிக்பாஸில் தமிழில் உளறிய ஸ்ருதிகா… அப்புறம் நடந்ததுதான் காமெடியே!..

latest news

இந்தி பிக்பாஸில் தமிழில் உளறிய ஸ்ருதிகா… அப்புறம் நடந்ததுதான் காமெடியே!..

ஸ்ருதிகா இந்தி பிக்பாஸில் வரவேற்பை பெற்று வருகிறார்

Shrutika: தென்னிந்தியாவிலிருந்து ஹிந்தி பிக் பாஸ் இருக்கு முதல்முறையாக சென்று இருக்கும் நடிகை ஸ்ருதிகா தன்னுடைய சுட்டித்தனத்தால் தற்போது ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

தமிழ் பிக் பாஸ் தொடங்கிய அதே நாளில் 18வது சீசன் இந்தி பிக் பாஸ் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் வட இந்திய பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொள்வார்கள். முதல்முறையாக தென்னிந்தியாவிலிருந்து நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் உள்ளே சென்றார்.

குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட ஸ்ருதிகா சுட்டித்தனமான பெண்தான். வெகுளியாக அவர் பேசும் பலவை ரசிகர்களை ரசிக்க வைத்தது. இவர் எப்படி இந்தியில் தாக்குப் பிடிப்பார் என தமிழ் ரசிகர்களே ஆச்சரியப்பட்டனர். முதல் நாள் இவருடைய இன்ட்ரோவை பார்த்த இந்திய ரசிகர்கள் நடிக்கிறாரோ என கேள்வி எழுப்பினர்.

ஆனால் தொடர்ந்து ஸ்ருதிகாவின் சுட்டித்தனத்தால் ரசிகர்கள் தற்போது அவருக்கு லைக்ஸ் குவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக தன்னுடைய கணவர் அர்ஜுனை பற்றி வாய் ஓயாமல் பேசிய ஸ்ருதிகா வைரலாகினார்.

தொடர்ந்து ப்ரோமோக்களில் இடம்பெற தொடங்கினார். காமெடியாக அவர் பேசும் விஷயங்கள் இணையதளங்களில் வீடியோக்களாக வைரலானது. இந்நிலையில் நேற்று பிக் பாஸ் குரல் அவரிடம் பேசும் போது தமிழில் சும்மா என அவர் கூறிவிடுவார். அது புரியாத பிக் பாஸ் குரலோ அவரிடம் அப்படின்னா என கேள்வி எழுப்ப அப்பொழுதுதான் தான் தமிழில் உளறிவிட்டதை நினைத்து ஸ்ருதிகா ஷாக்காக முகத்தை மாற்றினார்.

தொடர்ந்து சும்மா என்பதற்கான விளக்கத்தை ஹிந்தியில் அவர் கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஹிந்தி ரசிகர்கள் டைம் பாஸ் என்பதற்கு சும்மா என்பதை தற்போது வைரலாக்கி வருகின்றனர். இந்த புகழ்களால் ஸ்ருதிகா நீண்ட நாட்கள் ஹிந்தி பிக் பாஸில் நீடிப்பார் என நம்பப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top