தீபாவளிக்கு வெளியாகும் 3 படங்கள்!. ஹைப் இல்லாத பிரதர்!.. எந்த படம் தேறும்?!..

Published on: November 7, 2024
---Advertisement---

Diwali release: தமிழர்களை பொறுத்தவரை தீபாவளி என்றால் புதுத்துணி, இனிப்பு வகைகள், பட்டாசு என்பதோடு புது படங்கள் ரிலீஸும் கொண்டாட்டங்களில் ஒன்றாக சேர்ந்துவிட்டது. எனவேதான், பெரிய நடிகர்கள் தங்களின் படங்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

முன்பெல்லாம் ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், சத்தியராஜ் என பலரின் படங்கள் தீபாவளிக்கு வெளியாகும். எல்லா படங்களுமே தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு படங்கள் அல்லது 2 படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வெளியாகிறது.

அந்தவகையில், இந்த தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ் என பார்ப்போம். முதலில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் பற்றி பார்ப்போம். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். இந்த படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளை வேட்டையாடும்போது உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதையாகும்.

இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே, கண்டிப்பாக அமரன் திரைப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. அடுத்து இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் கவின் நடித்திருக்கும் பிளடி பெக்கர் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி கொஞ்சம் ஹைப்பை ஏற்றியுள்ளது. எனவே, இந்த படம் ஓரளவுக்கு வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது. இறுதியாக ராஜேஷின் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘மக்காமிஷி’ பாடல் ஹிட் அடித்திருக்கிறது. ஆனாலும், படத்திற்கு பெரிய ஹைப் இல்லை. அதற்கு காரணம் இப்போதுவரை இந்த படத்திற்கு புரமோஷனோ, விளம்பரமோ செய்யப்படவில்லை. எனவே, இந்த படம் பாக்ஸ் ஆபிசில் கல்லா கட்டுமா என்பது தெரியவில்லை. மனைவியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்திருக்கும் நிலையில் பிரதர் படம் தோல்வி அடைந்தால் அது ஜெயம் ரவியின் இமேஜை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment