கவுண்டமணிக்கு வந்த 50 கோடி சொத்து!. பல வருட போராட்டம்.. ஜெயிச்சாட்டாரு காமெடி கிங்!..

Published on: November 7, 2024
---Advertisement---

Goundamani: 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் கவுண்டமனி. பதினாறு வயதினிலே படத்தில் ரஜினியுடன் எப்போதும் இருக்கும் வேடம் பாக்கியராஜ் மூலம் கிடைத்தது. ‘பத்த வச்சியே பரட்ட’ என வசனம் பேசி ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் கிழக்கே போகும் ரயில் படத்தில் மனைவியின் தங்கையான ராதிகா மீது ஆசைப்படும் வேடத்தில் நடித்தார்.

அதன்பின் பல திரைப்படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் செந்திலை தன்னுடன் வைத்துக்கொண்டு காமெடி செய்து ரசிகர்களை பல வருடங்கள் சிரிக்க வைத்திருக்கிறார். ஹாலிவுட்டில் லாரன் ஹார்டி போல தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் கூட்டணி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

படத்தின் வெற்றிக்கே கவுண்டமணி செந்தில் காமெடி தேவைப்பட்டது. விஜயகாந்த், பிரபு, சத்தியராஜ், கார்த்திக், சரத்குமார் ஆகியோர் தங்களின் படங்களில் கவுண்டமணி காமெடி இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ரஜினியும் கூட பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறார்.

ரசிகர்களை சிரிக்க வைக்க கவுண்டமணிக்கு செந்தில் எல்லாம் தேவையில்லை. பல படங்களில் ஹீரோக்களுடன் இணைந்து இரண்டாவது ஹீரோவாக வலம் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். ஒருநாளைக்கு 10 லட்சம் சம்பளமாக வாங்கிய முதல் காமெடி நடிகர் கவுண்டமணிதான்.

ஒரு நாளைக்கு 4 படங்களில் நடிப்பார் கவுண்டமணி. தற்போது வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருக்கிறார். ஏதேனும், சினிமா விழாக்களில் மட்டும் அவ்வப்போது அவரை பார்க்க முடியும். இந்நிலையில், 50 கோடி ரூபாய் சொத்து ஒன்று கவுண்டமணியின் கைக்கு வந்திருக்கிறது.

1996ம் வருடம் சென்னை ஆற்காடு சாலையில் 5 கிரவுண்ட் நிலம் வாங்கியிருக்கிறார் கவுண்டமணி. ஆனால், வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் ஒன்று அந்த இடத்தை கைப்பற்றவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கவுண்டமணி. உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் கவுண்டமணிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர் வெளியேற்றப்பட்டு அந்த இடம் கவுண்டமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த நிலத்தின் தற்போதையை மதிப்பு 50 கோடி ஆகும். 20 வருடம் சட்டப்போராட்டம் நடத்தி தனது இடத்தை மீட்டிருக்கிறார் காமெடி கிங் கவுண்டமணி..

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment