கே.எஸ்.ரவிக்குமார் மிஸ் பண்ணிய விஜய் படம்… இதுக்கு சூப்பர்ஸ்டார் தான் காரணமா?

Published on: November 7, 2024
---Advertisement---

நடிகர் விஜய் தற்போது தமிழ்சினிமா உலகில் ரஜினிக்கு இணையாக 200 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் பெற்று வருகிறார். அவர் தற்போது நடிக்கும் தனது 69வது படம் தான் கடைசி என்றும் சொல்லி இருக்கிறார். அது தவிர அரசியலிலும் தீவிரமாக இறங்க உள்ளார்.

இதற்காக வரும் அக்டோபர் 27ல் பெரிய அளவில் மாநாடும் நடத்த உள்ளார். அரசியலில் மற்றவர்களுக்கு நான் ஒரு உதாரணமாக இருப்பேன் என்கிற ரேஞ்சில் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார் இவரை வைத்து மின்சார கண்ணா என்ற ஒரு படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஒரு புதுமுகத்தை கதாநாயகியாக போட்டதால் தான் படம் சரியாக ஓடவில்லை என்கின்றனர். அப்போது ரம்பா தான் பீக்கில் இருந்தாராம். அதனால் தான் அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்கின்றனர்.

விஜய் படம் ஒன்றைத் தான் மிஸ் பண்ணியதாகவும் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.

விஜயை வைத்து நான் ஒரே ஒரு படம் தான் பண்ணினேன். அது தான் மின்சாரக்கண்ணா. அப்புறம் ஒரு விஜய் படம் மிஸ் ஆனது. ராணான்னு ஒரு படம் பண்ணினேன்.

ரஜினி சார் சிங்கப்பூர் ஆஸ்பிட்டல்ல உடல் நிலை சரியில்ல அட்மிட் ஆகியிருந்தாரு. அப்போ யூனிட்ல இருந்தவங்க எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா போயிட்டாங்க. கேமரா மேன், ரேண்டின்னு வெயிட் பண்ணவங்க எல்லாரும் போயிட்டாங்க. தயாரிப்பாளரே நீங்க போங்க சார்னு சொன்னாரு.

ஆனா நான் மட்டும் போகல அப்போ விஜய் படம் வந்தது. அப்போ நான் விஜய்கிட்ட சொன்னேன். அவரு பாரு அங்கே ஆஸ்பிட்டல்ல படுத்துருக்காரு. அவரு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாம அடுத்த படம் நான் பணத்துக்கு ஆசைப்பட்டுப் போயிட்டேன்னு சொல்வாங்க.

வேண்டாம். அதுமட்டுமல்ல. அவரு வந்தபிறகு அவரு படம் பண்ணிட்டு வந்தா பரவாயில்லை. இல்ல மறுபடியும் இப்போதைக்கு அவரு படம் பண்ணமாட்டாங்கன்னு சொன்னா கூட பரவாயில்லை.

எதுவுமே தெரியாம நான் இப்போ கமிட் பண்ணினா நல்லாருக்காது. அதான் நான் படம் பண்ணல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment