Connect with us

Cinema News

பார்த்திபன் நடிக்க வந்ததுக்கு காரணமே அந்தக் காமெடி நடிகர் தானாம்… இது என்ன புதுக்கதையா இருக்கு?

நடிகர் பார்த்திபன் சினிமாவுக்கு நுழைவதற்கு முன் சந்தித்த சவால்கள்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு எந்த நிலைமையில் இருந்தார்? அவர் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லெட்சுமணன் சொல்கிறார். என்னன்னு பார்க்கலாமா…

பார்த்திபனோட அப்பா சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டிக் கொண்டு இருந்தாராம். அப்போ அவருடைய அப்பாவுடன் சேர்ந்து போவாராம் பார்த்திபன். ஒரு தடவை அப்படிப் போகும்போது நாகேஷ் நடிக்கிறதைப் பார்த்துள்ளார். அதைப் பார்த்து வியந்த பார்த்திபன் நாமும் அப்படி நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு தனது நடிகனாகும் ஆசையை அம்மாவிடம் தெரிவித்துள்ளாராம்.

‘அப்பா தான் நிறைய சினிமா கம்பெனிகளுக்கு கார் ஓட்டுறாரே… அவரிடம் சொல்லி எனக்கு நடிக்கிறதுக்கு சான்ஸ் வாங்கி தரச் சொல்லுங்க’ன்னு கேட்டாராம். இதைக் கேள்விப்பட்ட அப்பா, அம்மாவிடம் ‘முதல்ல அவனை நாலு வார்த்தையை ஒழுங்கா சேர்ந்தா மாதிரி தப்பு இல்லாமப் பேசச் சொல்லு.

அப்புறம் நடிக்கிறதைப் பத்திப் பேசிக்கலாம்’னு சொன்னாராம். அதன்பிறகு பலமுறை நடிகனாக முயற்சி செய்துள்ளார். எதுவுமே எடுபடவில்லை. நாடகக்குழுவில் சேர்ந்தா நடிகராகி விடலாம்னு நினைச்சி சேர்ந்தாராம். எஸ்.வி.ராமதாஸ் நாடகக்குழுவில் எல்லாம் சேர்ந்து நடிச்சாரு. ஆனா அவரோட துரதிர்ஷ்டம் என்னன்னா எஸ்.வி.ராமதாஸோட நாடகம் ஒண்ணு கூட சென்னையில நடக்கல.

அந்தக் காலகட்டத்துல சபாக்கள் கிடைக்கிறது எல்லாம் கஷ்டம். அவர் நாடகம் எல்லாம் செங்கற்பட்டு தாண்டித்தான். அங்கே எந்தத் தயாரிப்பாளர் போவாரு? அதனால அவர் ரூட்டை மாத்துறாரு. அந்தக் காலகட்டத்துல தான் பாக்கியராஜ் கதாநாயகன் ஆனாரு. அந்த வகையில் அவர் எப்படி ஆனாருன்னு பார்த்தா பாரதிராஜாவிடம் உதவி இயக்குனரா சேர்ந்துருக்காரு.

அப்படின்னா உதவி இயக்குனரா சேர்ந்தா கதாநாயகனா ஆகிடலாம்னு நினைச்சிருக்காரு. அப்படியே பாக்கியராஜிடம் உதவி இயக்குனரா மாறிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி அவரிடம் உதவியாளராக சேர்கிறார். அப்படித்தான் நடிகராகி இருக்கிறார் பார்த்திபன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top