Connect with us

Bigg Boss

விக்ரம் படத்துக்கும் பிக்பாஸ் தமிழுக்கும் இப்படி ஒரு சம்மந்தமா? வைரலாகும் புகைப்படம்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது

Vikram: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்த விக்ரம் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் தற்போது ஒரு சுவாரசிய தொடர்பு ஏற்பட்டிருப்பதை ரசிகர்கள் புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

தொலைக்காட்சி பார்ப்பவர்கள் இரண்டு ரகமாக தான் இருப்பார்கள். சீரியல் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள். இதில் பெண்களைத் தவிர மற்ற எல்லாருமே ரியாலிட்டி நிகழ்ச்சியின் மீது தான் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.

ஏழு சீசன்களை முடித்துக் கொண்டு நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளே வந்திருக்கிறார். எப்படி நிகழ்ச்சியை எடுத்து செல்வாரோ என ரசிகர்களுக்கு முதலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

நேற்று ஒளிபரப்பான முதல் நாள் எபிசோடு ஒரு சில நிமிடங்களிலேயே கமல்ஹாசனின் சரியான மாற்று இவர்தான் என ரசிகர்களிடம் அப்ளாஸை அள்ளி இருக்கிறார். புகழ்ந்து பேசினால் அமைதி ஆகிவிடுவார் என போட்டியாளர்கள் கணித்து விஜய் சேதுபதியிடம் இனிக்க பேசினர்.

ஆனால் விஜய் சேதுபதி தனது தோன்றியவற்றை முகத்துக்கு நேராக கேட்டு போட்டியாளர்களை உள்ளே செல்லும் முன்னரே ஆட்டம் காண வைத்தார். இதனால் நிகழ்ச்சிக்கு இது நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கும் விக்ரம் திரைப்படத்திற்கும் ஒரு தொடர்பு அமைந்திருக்கிறது.

ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்தது போல விக்ரம் படத்தின் ஹீரோதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வழங்கி வந்தார். அப்படத்தில் சந்தானமாக நடித்த விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள். மைனா நந்தினி, மகேஸ்வரி மற்றும் ஷிவானி நாராயணன்.

இவர்கள் மூவருமே கடந்த சீசன் பிக் பாஸ்களில் கலந்து கொண்டிருக்கிறனர். இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிக் பாஸுக்குள் வந்திருக்கிறார். இதனால் தற்போது விக்ரம் படத்தின் சந்தானமும் பிக் பாஸ் வந்து விட்டாரே என ரசிகர்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Bigg Boss

To Top