Connect with us

Bigg Boss

மக்கள் செல்வன் மாஸ் காட்டுறாரே!.. பிக் பாஸ் புது ஹோஸ்ட்டுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பு!..

விஜய் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள நிலையில், அவருக்கு ஷோவின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட வரவேற்பு காட்சிகள் வெளியாகி உள்ளன.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று முதல் இதுவரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்க போகிறார். அக்டோபர் 6 ஆம் தேதியான இன்று பிக் பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி சீசன் ஐந்து நிகழ்ச்சி சமீபத்தில் முடிந்த நிலையில், அடுத்ததாக ரசிகர்களை கவரும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி ஆரம்பிக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதிலாக சிம்பு சில வாரங்கள் தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது சிம்பு சினிமாவில் பிஸியாக உள்ள நிலையில், விஜய் சேதுபதி புதிய பிக் பாஸ் தொகுப்பாளராக மாறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் அது தொடர்பான ப்ரோமோக்கள் விஜய் டிவியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. புதிதாக வெளியாகியுள்ள ப்ரோமோவில் நடிகர் விஜய் சேதுபதி கோட் சூட் கூடையுடன் அரங்கத்திற்கு புதிய பிக் பாஸ் ஹோஸ்ட்டாக களமிறங்கியுள்ள நிலையில் அவருக்கு ஆட்டமும் பாட்டத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

இந்த சீசனை விஜய் சேதுபதி எந்த அளவுக்கு சிறப்பாக கையாளப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய் தியேட்டரில் வசூல் செய்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்த படம் வெளியாகி சுமார் 150 கோடி ரூபாய் வரை சம்பாதித்து கொடுத்துள்ளது. விஜய் சேதுபதி மகாராஜா படத்திற்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்த்த நிலையில், சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஒரே நேரத்தில் கமல்ஹாசன் போல என்னாலும் கவனத்தை செலுத்த முடியும் என நிரூபிக்க ரெடியாகி விட்டார்.

விஜய் சேதுபதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் டிரெய்ன் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஏஸ் எனும் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Bigg Boss

To Top