என் அடுத்த டார்க்கெட் ஹெச்.வினோத்!.. ரஜினியை பங்கம் செய்யும் புளூசட்ட மாறன்!…

Published on: November 7, 2024
---Advertisement---

Rajinikanth: பல வருடங்களாக நம்பர் ஒன் நடிகராகவும், சூப்பர்ஸ்டாராகவும் சினிமாவில் வலம் வருபவர் ரஜினிகாந்த். தனக்கான ஃபார்முலா என்ன? தனது ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும்?.. எது தனக்கு செட் ஆகாது? இப்போது டிரெண்டிங் என்ன?.. என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். அதனால்தான் இப்போதும் அவரால் ஹிட் படங்களை கொடுக்க முடிகிறது.

ரஜினி எப்போதும் ஹிட் கொடுக்கும் இயக்குனர்களுடன் மட்டுமே பயணம் செய்வார். 80களில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பல படங்களிலும் நடித்தார். எல்லாமே ஹிட் படங்கள்தான். அவரின் இயக்கத்தில் மட்டும் 25 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அதன்பின் பி.வாசு இயக்கத்தில் பல படங்களிலும் நடித்தார்.

பாபா தோல்விக்கு பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் பி.வாசுவுடன் கூட்டணி அமைத்து சந்திரமுகி எனும் மாஸ் ஹிட் படத்தை கொடுத்தார். கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்கும் இளம் இயக்குனர்களுடன் கை கோர்க்க துவங்கிவிட்டார். அதனால்தான் ஷங்கர், ஏ.ஆ.முருகதாஸ், பா.ரஞ்சித், நெல்சன், சிறுத்தை சிவா, த.ச.ஞானவேல், லோகேஷ் கனகராஜ் என அவரின் பயணம் தொடர்கிறது.

அதாவது, விஜய், அஜித்தை வைத்து ஹிட் படங்களை இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிவிட்டார் ரஜினி. அதாவது டிரெண்டிங்கில் இருக்கும் இயக்குனர்களுடன் பயணிக்க துவங்கிவிட்டார். இது ஒரு சாணக்கியத்தனம் என்றாலும் புளூசட்ட மாறன் போன்ற சிலர் இதை வைத்தே ரஜினியை கலாய்த்தும் வருகிறார்கள்.

மாறன் டிவிட்டர் பக்கத்தில் ‘ஆயுத பூஜைக்கு வரவிருந்த கங்குவாவை விரட்டி விட்டு என்னோட வேட்டையன் படத்தை ரிலீஸ் பண்றேன்.. கைதி 2 பண்ண வேண்டிய லோகேஷை கைது பண்ணி கூலி படம் எடுக்க வச்சிட்டேன். விஜய் பட டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், நெல்சன், லோகேஷை என் ப்ராஜக்ட்ல கொண்டு வந்தேன். என் அடுத்த டார்கெட் ஹெ.வினோத். எப்படி என் சாணக்ய தந்திரம்?’ என பதிவிட்டு வடிவேலு புகைப்படத்தை ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘யோசித்து பார்த்தால் நீங்கள் சொல்றது சரியாத்தான் இருக்கு’ என பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ ‘தலைவரு யோசிக்கிறாரோ இல்லையோ.. நீங்க நல்லா யோசிக்கிறீங்க’ என பதிவிட்டு வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment