Connect with us
poonam bajwa

Bigg Boss

கச்சேரியே களைகட்டாதேடா!.. பிக் பாஸ் சீசன் 8ல் புசு புசு பூனம் பஜ்வா இல்லையா?.. அப்செட்டான ஃபேன்ஸ்!..

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பூனம் பஜ்வா வரப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் பங்கேற்கவில்லை என கடைசி நேர தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

ரசிகர்கள் பெரிதம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நாளை முதல் தினந்தோறும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த முறையும் 24 மணி நேரமும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்களை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசன் இருந்து ஏழாவது சீசன் வரை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவதில்லை என அறிவித்துவிட்டார். கடந்த சில சீசர்கள் ஆக பிக்பாஸ் நிகழ்ச்சி ரொம்பவே ரசிகர்கள் மத்தியில் போரடிக்க ஆரம்பித்த நிலையில், கமல்ஹாசனுக்கு பெரிய தொகையை சம்பளமாக வழங்க முடியாது என்பதால் தான் விஜய் டிவி அவரை விலக்கி விட்டதாக சில தகவல்கள் கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்ததாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க அவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வீதம் ப்ரோமோ சூட்டிங் முதல் 15 நாட்கள் ஷோ வரை என ஒட்டுமொத்தமாக 18 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக தர்ஷா குப்தா, ரஞ்சித், ஷாலின் சோயா, ஜாக்குலின், தீபக், தயாரிப்பாளர் ரவீந்தர், சச்சனா, சௌந்தர்யா நஞ்சுண்டான், அர்ணவ் உள்ளிட்ட பலர் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நடிகை பூனம் பஜ்வா பிக் பாஸ் சீசன் 8ல் பங்கேற்கவில்லை என்கிற தகவல் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தர்ஷா குப்தாவுக்காகத்தான் பார்க்க வேண்டும் போல என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம் படத்தின் மூலம் சர்ச்சையை கிளப்பிய நடிகர் ரஞ்சித் மற்றும் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்ட சர்ச்சை பிரபலங்கள், ராப்பர் பால் டப்பா உள்ளிட்ட பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிக கண்டெண்டுகளை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Bigg Boss

To Top