Vijayakanth: எதிர்பார்க்கவே இல்ல! இவ்ளோ பணம் கொடுப்பாருனு.. விஜயகாந்த் பற்றி சிலாகித்து பேசிய நடிகை

Published on: November 8, 2024
vijayakanth
---Advertisement---

Vijayakanth: சினிமாவில் சக கலைஞர்களுக்கு ஒரு உதவி என்றால் முதல் ஆளாக வந்து நிற்பவர் கேப்டனும் நடிகருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த். இவரால் எத்தனையோ பல கலைஞர்கள் உதவி பெற்று இன்று நல்ல முறையில் வாழ்ந்து வருகின்றனர் .

திருமணத்திற்கான செலவு மருத்துவ செலவு படிப்பு செலவு என பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார் விஜயகாந்த். அதனால் தான் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து ஒரு மாபெரும் மனிதராக போற்றப்படுகிறார்.

கிட்டதட்ட எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்தை தான் அனைவரும் போற்றி மகிழ்கின்றனர். அதேபோல எம்ஜிஆர் இறந்த போது பல லட்சக்கணக்கான பேர் கூடி அவருக்காக அழுவதை பார்க்க முடிந்தது. அதைப் போல தான் விஜயகாந்தின் மறைவிற்கும் லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.

vijayakanth
vijayakanth

எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அதிகம் பேர் கூடிய ஒரு இரங்கல் கூட்டம் என்றால் அது விஜயகாந்திற்கு மட்டும்தான் .இப்படி பொது வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி ஒரு மாபெரும் மனிதராகவே வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் விஜயகாந்த்.

இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகை சாந்தி வில்லியம்ஸ் விஜயகாந்த் பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். பேரரசு படத்தில் விஜயகாந்துக்கு அண்ணியாக நடித்திருப்பார் சாந்தி வில்லியம்ஸ். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் என்ற அடிப்படையில் சம்பளம் பெற்றுக் கொண்ட சாந்தி வில்லியம்ஸ் இரண்டு நாள் சேர்த்து 20,000 சம்பளம் கொடுப்பார்கள் என நினைத்துக் கொண்டிருந்தாராம்.

shanthi williams
shanthi williams

ஆனால் அவரிடம் கொடுக்கப்பட்ட தொகை ஒரு லட்சம் ரூபாய். உடனே சாந்தி வில்லியம் 20000 ரூபாய் தானே. ஒரு லட்சம் கொடுக்கறீங்க எனக்கு கேட்டதற்கு அண்ணன் தான் கொடுக்க சொன்னாரு என விஜயகாந்த் பெயரை சொல்லி கூறி இருக்கிறார்கள் .அந்த நேரத்தில் விஜயகாந்த் ஸ்பாட்டுக்கு வர சாந்தி வில்லியம்ஸ் விஜயகாந்திடம் தொகை அதிகமாக இருக்கிறது என கூறினாராம்.

அதற்கு விஜயகாந்த் பரவாயில்லை வைத்துக்கொள் என சொல்லி இருக்கிறார் .அதற்கு காரணம் அந்த நேரத்தில் சாந்தி வில்லியம்சுக்கு ஏகப்பட்ட கடன் இருந்திருக்கிறது. பணம் நெருக்கடியிலும் இருந்திருக்கிறார். அதை புரிந்து கொண்ட விஜயகாந்த் ஒரு லட்சம் ரூபாயை கொடுத்திருக்கிறார்.
அந்த பணத்தை வைத்து தான் சாந்தி வில்லியம்ஸ் அவருக்கு இருந்த 75 ஆயிரம் கடனை அடைத்திருக்கிறார். இதை ஒரு பேட்டியில் சார்ந்தி வில்லியம்ஸ் கூறினார்.

இதையும் படிங்க: தயாரிப்பாளரின் மீசையை எடுக்க வைத்த முரளி! தெரிஞ்சு விஜயகாந்த் சும்மா இருப்பாரா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.