Connect with us
sathyaraj

Cinema News

Ajithkumar: ‘தம்பி அஜித்’ வாண்டட் ஆக புகழ்ந்த சத்யராஜ்… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!

Ajithkumar: தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிரித்து மேய்ந்து விடுவார். இவரின் இடத்தை நிரப்பிட இன்னும் யாரும் பிறந்து வரவில்லை என்றுதான் கூறவேண்டும். அந்தளவு காமெடி, குணச்சித்திரம், வில்லன் என எந்த வேடம் கொடுத்தாலும் பொருந்தி போகக் கூடிய நடிகர் சத்யராஜ்.

அதனால் தான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சத்யராஜ் தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினி அடம்பிடிக்கவும் காரணமாக இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவொன்றில் நடிகர் அஜித்தினை சத்யராஜ் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இதையும் படிங்க: போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதா? அமரன் படக்குழுவிற்கு சரமாரியாய் கேள்வி கேட்கும் பிரபலம்

மதம் குறித்து பேசுகையில், ‘தம்பி அஜித் இதைத்தான் சிறப்பாக சொன்னார். நீங்கள் வேறு நாட்டுக்கு செல்லும்போது, சம்பந்தம் இல்லாத ஒரு மனிதர் மீது உங்களுக்கு வெறுப்பு வருவதற்கு காரணம் மதம் என அழகாக எடுத்து கூறினார். அவருக்கு எனது பாராட்டுகள்’ என வாழ்த்தி இருக்கிறார்.

Ajith vijay

Ajith vijay

சத்யராஜ் அஜித்தை வாழ்த்தியது செய்தி இல்லை தான். ஆனால் அரசியல் என்ட்ரி கொடுத்துள்ள விஜய்யின் கடைசி படத்தில் நடிக்க மறுத்து விட்டு, அஜித்தை திடீரென புகழ்ந்தது தான் இந்த செய்தி இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமாக உள்ளது. இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ஒரு மூத்த நடிகர் என்றும் பாராமல் சத்யராஜை மோசமாக சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: தக் லைஃப்ல கமல் செய்த மேஜிக்… விஸ்வரூபமா, குருதிப்புனலா? இப்படி தெறிக்க விடுறாரே!

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top