என் பொண்டாட்டிதான் இருக்கா வேணுமா?.. கோபப்பட்ட தயாரிப்பாளர்.. முரளி படத்தில் நடந்த கலாட்டா!..

Published on: November 9, 2024
murali
---Advertisement---

Murali: ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி ஹீரோ, ஹீரோயினும் முக்கியம். அதுவும் ஒரு ஹீரோவை விட ஹீரோயினை தேடும் படலம் இருக்கே? அது ஒரு பெரிய டாஸ்க். இப்போதெல்லாம் இன்ஸ்டா மூலம் பிரபலமாகி உடனே ஹீரோயின் ஆகி விடுகிறார்கள். ஆனால் ஆரம்ப கால கட்டங்களில் ஒவ்வொரு ஸ்டூடியோவாக தங்களுடைய புகைப்படங்களை கொடுத்து ஏறி இறங்க வேண்டியிருக்கும்.

அதிலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அந்த புகைப்படங்களை பார்த்து மேலும் லுக் டெஸ்ட் என்ற ஒன்றை வைத்து அவர்களுக்கு பிடித்தால்தான் வாய்ப்பு என்பது உறுதி. இந்த நிலையில் முரளி பட நடிகையை அந்தப் பட இயக்குனருக்கு பிடிக்காமல் தயாரிப்பாளருக்கு பிடித்துப் போயிருக்கிறது. அதன் பிறகு அந்த நடிகை எப்படி உள்ளே வந்தார் என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படிங்க: Actor Vijay: எங்களுக்கு அவர்தான் ஹீரோ! ராணுவ அகாடமியில் விஜய்க்காக வீரர்கள் செய்த சம்பவம்

முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. அந்தப் படத்தின் ஹீரோயின் ராதா. படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ். படத்திற்கு ஹீரோயினை பல இடங்களில் தேடியிருக்கின்றனர். பின் கஸ்தூரி ராஜாவை ஒரு நடிகை பார்த்துவிட்டு வெளியே வரும் போது அந்த நடிகை தயாரிப்பாளர் தங்கராஜுக்கு பிடித்துப் போயிருக்கிறது.

உடனே அவருடைய புகைப்படத்தை வாங்கி வைத்துக் கொண்டாராம். பின் தங்கராஜுக்கு தெரிந்த நபர் ஒருவரின் மூலமாகத்தான் ராதா அறிமுகமாகியிருக்கிறார். அவரையும் தங்கராஜுக்கு பிடித்துவிட்டதாம். பின் படத்தின் இயக்குனருக்கு ராதாவின் புகைப்படத்தை தங்கராஜ் அனுப்பி வைத்திருக்கிறார். போட்டோவை பார்த்ததும் இயக்குனருக்கு பிடிக்கவில்லையாம்.

radha
radha

இதையும் படிங்க: SK: தனுஷ விடுங்க நம்ம சிவகார்த்திகேயனை பாருங்க!… கைவசம் இத்தனை படங்களை வச்சிருக்காரா?!…

வேறு யாரையாவது பார்க்கலாமே என இயக்குனர் கேட்டிருக்கிறார். அதற்கு தங்கராஜ் வேற ஆள பார்க்கனும்னா என் பொண்டாட்டித்தான் இருக்கா? வேணுமா என்று கேட்டாராம். ஏனெனில் பல நடிகைகளை இயக்குனருக்கு காட்டியும் ஒரு நடிகை கூட பிடிக்கவில்லையாம் அந்த இயக்குனருக்கு. அந்த கடுப்பில்தான் தயாரிப்பாளர் இப்படி ஒரு வார்த்தையை கேட்டிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.