SK Vs Kavin: சிவகார்த்திகேயனுக்கும், கவினுக்கும் என்ன பிரச்சனை? ஒரே நாள்ல படத்தை விட்டது இதுக்குத்தானா?

Published on: November 10, 2024
kavin sk
---Advertisement---

தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படமும், நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்த ப்ளடி பெக்கர் படமும் ரிலீஸ் ஆனது. கவினை சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாகக் களம் இறக்கணும்னு தான் நெல்சன் இந்த வேலையைச் செய்தாரான்னு வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் பதில் சொன்னது இதுதான்.

கவின் இன்னும் வளரவே இல்லை

சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாக கவின்னு சொல்றது எல்லாம் ஓவரான வார்த்தை. அந்தளவுக்கு அவர் இன்னும் வளரவே இல்லை. அவர் வளர்ந்து வர்ற காலத்துல சிவகார்த்திகேயன் இன்னும் வளர்ந்து வேறொரு இடத்துல இருப்பாரு. அதனால அது போட்டி எல்லாம் இல்லை.

Also Read: Sivakarthikeyan: எஸ்கே மனைவியின் காதலனை வில்லனாக களமிறக்கும் SK25 படக்குழு… உங்களுக்கு மனசாட்சி இல்லையாப்பா?

அப்படி நாம நினைக்கக்கூடாது. இன்னொன்னு பணம் போட்டவங்க, நாள் தோறும் வட்டி கட்டறவங்க எப்படியாவது நம்ம படத்தைக் குறிப்பிட்ட நாள்ல கொண்டு வரணும்னு தான் நினைப்பாங்க. தவிர அவரு நண்பர், இவரு நண்பருன்னு நினைச்சா அவருக்கு நண்பரா வட்டி கட்டுவாரு? அதனால அது தவறு கிடையாது. இதுல இவங்களுக்குள்ள நேரடி மோதலும் கிடையாது. அவங்க ரிலீஸ் பண்ணினதுல தவறும் கிடையாது.

SKவா? கவினா?

Amaran bloody begger
Amaran bloody begger

அமரன் படம் மட்டும் வருதுன்னா வேறொரு பெரிய படம் ரிலீஸ் ஆகறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஆனா முந்திக்கிட்டு கவின் படமும் வந்துருக்கு. இந்த 2 படங்களுமே அதிகப்படியான தியேட்டர்களைப் பிடிச்சிடுவாங்க.

அப்படின்னா இன்னொரு பெரிய படம் வருவது தவிர்க்கப்படும். அதன்காரணமாகக் கூட நண்பர்கள் ஒரே நாள்ல வரலாம்னு முடிவு பண்ணிருக்கலாம். இது ஒரு உத்தி தான். சரியாகவும் இருக்கலாம். தப்பாகவும் இருக்கலாம் என்கிறார் வலைப்பேச்சு பிஸ்மி.

மாஸ் காட்டும் அமரன்

தீபாவளிக்கு வந்த படங்களில் அமரன் படம் இன்று வரை மாஸ் காட்டி வருகிறது. மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் இருந்து சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அடுத்த லெவலை எட்டியுள்ளது என்றே சொல்லலாம்.

Also Read: Lyca: பெரிய நடிகர்களின் ஆதரவை இழக்கும் லைக்கா!.. இப்படியே போனா இழுத்து மூட வேண்டியதுதான்!..

அதனால் தான் கூலி படத்து சூட்டிங்கைப் பார்க்கச் சென்ற போது கூட படத்துல நடிக்கிறீங்களான்னு கேட்டபோது இல்லை. சும்மா பார்க்க வந்தேன்னு சொல்லி நழுவியதாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் பிளடி பெக்கரும் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.