Biggboss Tamil 8: அந்த ‘ரெண்டு’ பேரும் உங்க கண்ணுக்கு தெரியலயா பிக்பாஸ்?

Published on: November 10, 2024
muthu
---Advertisement---

Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் தற்போது 21 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேறுவார். ஆக உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எண்ணிக்கை 20 ஆக குறையும். வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் யாரும் ஒழுங்காக விளையாடவில்லை. எனவே வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கினார் பிக்பாஸ்.

ஆனால் அவர்களும் நாம யாரு வம்புக்கு போக வேணாம் பாஸ் நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம் என அமைதி காக்கின்றனர். இதற்கு மேல் விஜய் சேதுபதியும், பிக்பாஸும் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்றால் தான் ஓரளவு டிஆர்பியை தக்க வைத்திட முடியும்போல. அந்தளவு ரொம்ப மொக்கையான சீசனாக இது இருக்கிறது.

இதையும் படிங்க: Kamal : சின்ன புள்ளத்தனமா இருக்கே?!… கமல் குறித்து யாருக்கும் தெரியாத சீக்ரெட் பகிர்ந்த ஸ்ருதிஹாசன்!..

இந்தநிலையில் வீட்டில் கொஞ்சம் கொளுத்திப்போட்டு கொண்டு இருந்த, தங்களது சொந்த போட்டியாளர் சுனிதாவை வீட்டில் இருந்து இந்த வாரம் பிக்பாஸ் வெளியேற்றி இருக்கிறாராம். டேஞ்சர் லிஸ்டில் இருந்த சாச்சனா அல்லது ஆர்ஜே ஆனந்தியை வெளியே அனுப்புவார் என்று பார்த்தால், கவிதை சொல்லி சவுந்தர்யாவிடம் வம்பிழுத்து அவரை டென்சன் ஆகிய சுனிதா செல்லத்தை அனுப்பி இருக்கின்றனர்.

sunitha
sunitha

இதைக்கேட்ட நெட்டிசன்கள் ஆனந்தி, சாச்சனாவை விட சுனிதா எதில் குறைந்து போய் விட்டார்? ஆண் போட்டியாளர்களில் இருந்து ஒருவரை வெளியே அனுப்பி இருக்கலாமே என பிக்பாஸை வச்சு செய்து வருகின்றனர். ஒருவேளை வெளியில் சென்று நிகழ்ச்சியை பார்த்து சந்திரமுகியாக மாறி சுனிதா மீண்டும் உள்ளே வரட்டும் என பிக்பாஸ் நினைத்திருக்கிறாரோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: SK Vs Kavin: சிவகார்த்திகேயனுக்கும், கவினுக்கும் என்ன பிரச்சனை? ஒரே நாள்ல படத்தை விட்டது இதுக்குத்தானா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.