Sivakarthikeyan: இசை கச்சேரிகளில் மிமிக்ரியும், நடனமும் ஆடிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆங்கராக சேர்ந்தார். மேலும், பல சினிமா விழாக்களிலும் ஆங்கராக இருந்திருக்கிறார். ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வரவே தீவிரமாக முயற்சி செய்தார்.
துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் படிப்படியாக உயர்ந்து இப்போது முன்னணி ஹீரோவாக மாறியிருக்கிறார். காமெடி கலந்த காதல் கதைகளில் நடிப்பதுதான் சிவகார்த்திகேயனின் ஸ்டைல். அதுதான் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் இதை பார்க்கலாம்.
இதையும் படிங்க: Ajith: நேருக்கு நேரா மோதணும்னா எதிரியும் வலுவா இருக்கணும்… எப்படி இருக்கு அஜீத் ஸ்டைல்?
சிவகார்த்திகேயன் சீரியஸாக நடிக்க துவங்கிய ஹீரோ, வேலைக்காரன் போன்ற படங்கள் ஓடவில்லை. எனவே, மீண்டும் காமெடி ரூட்டுக்கு திரும்பினார். டான், பிரின்ஸ், மாவீரன் போன்ற படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது. அதன்பின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இந்த படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாதிகளின் தாக்குதலில் மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை ஆகும். இந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவகார்த்திகேயன். கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் 200 கோடியை வசூல் செய்திருக்கிறது.

இனிமேல் காமெடி பக்கம் போகாமல் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் பற்றி பார்ப்போம். அமரன் அவரின் 22வது திரைப்படமாகும்.
23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். 24வது திரைப்படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். 25வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளார். 26வது படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: Kamalhassan: எனக்கு எந்த பட்டமும் வேண்டாம்?!… அஜித் ரூட்டை பின்பற்றிய கமல்ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
