Dhanoosh: தனுஷுக்கு தேவை நர்ஸ்.. பொண்டாட்டி இல்ல?!… எதுக்கு இந்த பொம்மை கல்யாணம்… விமர்சகர் தடாலடி!…

Published on: November 11, 2024
---Advertisement---

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து பிரபல கிருஷ்ணவேல் பேட்டியில் பேசியிருக்கின்றார்.

நடிகர் நெப்போலியன்: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் நடிகர் நெப்போலியன். இவரின் மூத்த மகன் தனுஷுக்கும், நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் டோக்கியோவில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. பாரம்பரிய முறைப்படி தனது மகனுக்கு மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்திருந்தார் நடிகர் நெப்போலியன்.

இதையும் படிங்க: Kanguva: சூர்யாவின் ஓவர் கான்ஃபிடன்ஸ்… பில்டப் மேல பில்டப்…! அடுத்த அஞ்சானா மாறிடுமோ?!…

பிரபலங்கள் என்ட்ரி: சில தினங்களாக சமூக வலைதள பக்கங்களை திறந்தாலே நடிகர் நெப்போலியன் மகன் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் தான் வளம் வந்தது. மேலும் சினிமாவை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் ஜப்பானுக்கு சென்று இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். நடிகை குஷ்பூ, ராதிகா, சுஹாஷினி, மீனா, கலா மாஸ்டர், நடிகர் கார்த்திக், youtuber இர்ஃபான் உள்ளிட்ட பலரும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது.

விமர்சனங்கள்: மிக விமர்சையாக திருமணம் நடைபெற்றாலும் நெப்போலியன் மகன் தனுசுக்கு இருக்கும் தசை சிதைவு நோயை வைத்து பலரும் பலவிதமான விமர்சனங்களை தெரிவித்து வந்தார்கள். அந்த வகையில் youtube சேனல் ஒன்றுக்கு சமூக ஆர்வலரும் விமர்சகர்மான கிருஷ்ணவேல் பேட்டி கொடுத்திருந்தார் .அந்த பேட்டியில் நெப்போலியன் மகன் திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார் .

கிருஷ்ணவேல் பேட்டி: நெப்போலியன் தனது மகனுக்கு இப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. திருமணத்தை எதற்காக செய்கிறோம். ஒரு ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான். சிலர் கூறுவார்கள் இரு மனங்கள் இணைந்தால் போதாதா? உடல் தேவை மட்டும் தான் வாழ்க்கையா? என்று கூறலாம்.

இதெல்லாம் பேச்சுக்கு மட்டுமே பொருந்துமே தவிர வாழ்க்கைக்கு சாத்தியமாகாது. மாற்றுத்திறனாளியான அவரால் சரியாக எழுந்து கூட நடக்க முடியாது. இப்படிப்பட்ட அவருக்கு ஒரு பொண்டாட்டி தேவை இல்லை, நர்ஸ் தான் தேவை, அவரை கவனித்துக் கொள்வதற்கு ஒரு செவிலியரை ஏற்பாடு செய்வதை விட்டுவிட்டு மனைவி என்ற பெயரில் ஒரு பெண்ணின் வாழ்க்கையவே அழித்துவிட்டார் நெப்போலியன்.

நெப்போலின் சுயநலம்: பெரிய ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியினால் இதை ஏன் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த கல்யாணத்தால் யாருக்கு என்ன பயன் அவரது மகன் தனுசுக்கோ அல்லது அந்த பெண்ணுக்கோ ஏதாவது பிரயோஜனம் இருக்கின்றதா? நடிகர் நெப்போலியன் பேட்டியில் கூட அந்த பெண்ணின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து வைத்தோம் என்று கூறுகின்றார்.

இதையும் படிங்க: Ajith: நேருக்கு நேரா மோதணும்னா எதிரியும் வலுவா இருக்கணும்… எப்படி இருக்கு அஜீத் ஸ்டைல்?

ஆனால் அந்தப் பெண் தானாக தான் சம்மதித்தாரா? இல்லை கட்டாயப்படுத்தப்பட்டு சம்பாதிக்கப்பட்டாரா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். இந்த திருமணம் ஒரு பொம்மை திருமணமே தவிர இதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது என்று அவர் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார் கிருஷ்ணவேல். இது சமூக வலைதள பக்கங்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.