
latest news
Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..
Published on
By
Sarathkumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சரத்குமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் ஹீரோவாக இருந்தபோது தன்னுடைய படத்திற்காக கொடுத்த அதீத ஈடுபாடு குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
சரத்குமார் படங்கள்: பல கட்ட போராட்டத்திற்கு பின்னர் தமிழில் சரத்குமார் நடிக்க இருந்த சின்ன பூவே மெல்ல பேசு திரைப்படத்தின் வாய்ப்பு பறிபோனது. இதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேக்கப் மேன் மூலம் விஜயகாந்தின் அறிமுகம் கிடைத்தது.
இதையும் படிங்க: Ramyapandian: திருமணம் முடிந்த கையோட ஹனிமூன்!… கணவருடன் ரம்யா பாண்டியன் எங்க போயிருக்காங்க தெரியுமா?!..
அதைத் தொடர்ந்து புலன் விசாரணை திரைப்படத்தில் நடித்தார். படம் சரத்குமாருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கோலிவுட்டில் உருவாக்கிக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அப்படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதைத்தொடர்ந்து வில்லனாகவே கோலிவுட்டில் தொடர்ந்தார் சரத்குமார்.
மீண்டும் ஹீரோ அவதாரம்: இதைத்தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக சூரியன் திரைப்படத்தில் நடித்தார். திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியாக அமைய ஹீரோவாகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். சரத்குமார் நடிப்பில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
தொடர்ச்சியாக ஹீரோவாக நடித்து வந்த சரத்குமார் வெற்றி நாயகன் வரிசையில் அமர்ந்தார். அந்த நேரத்தில் அவருக்கு சூரியவம்சம் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. 1997 ஆம் ஆண்டு பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் விக்ரமனை சூப்பர் குட் பிலிம்ஸ் படம் இயக்க வாய்ப்பு கொடுத்தது.
முதலில் அந்த நிறுவனத்திடம் விக்ரமன் வானத்தைப்போல கதையை தான் கூறினாராம். ஆனால் சரத்குமாரை வைத்து தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதால் அந்த கதையை மாற்றி தான் சூர்யவம்சம் படத்தின் கதையை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா ட்ரெய்லரில் வந்த நம்பர்!… இதுல இப்படி ஒரு நியூமராலஜி இருக்கா?!… பயங்கரமா இருக்கே!…
அந்த காட்சி ஷூட்டிங்கிற்காக இயக்குனர் விக்ரமன் பட குழுவிடம் இரவு சரத்குமார் சாப்பிட பிரெஷ் ஆன சாப்பாட்டை தயார் செய்து வைக்க கூறியுள்ளனர். அது போல் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் சரத்குமார் சாப்பிட்டுக்கொண்டே பின்பக்கம் திரும்பி அதைத் துப்பிக் கொண்டே இருந்தாராம்.
இதையும் படிங்க: Vijay Trisha: விஜய் இத மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்.. அப்பவே சொன்ன திரிஷா! அதுக்கு விஜய் பதில பாருங்க
உடனே விக்ரமன் என்னப்பா ஆச்சு ஏன் உனக்கு அரிசி சாப்பாடு பிடிக்காதா என கேட்கிறார். சரத்குமாரோ இல்லை இந்த சாப்பாடு ரொம்ப மோசமான அளவு கெட்டுப் போய்விட்டது. யூனிட் ஆட்களிடம் கேட்டேன் அவர்கள் இயக்குனரிடம் இதை சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டார்கள்.
suryavamsam
அவர்களை காப்பாற்ற வேண்டிதான் இந்த சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். வாயில் அடக்கி வைத்துக் கொண்டு காட்சி முடிந்ததும் அதை துப்பிக் கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். சாப்பாடு மற்றும் சாம்பார் மோசமான அளவு தாண்டி கெட்டுப் போயிருந்ததாகவும், ஷூட்டிங்கை கெடுத்து விடக்கூடாது என்பதால் சரத்குமார் அதை பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்ததாகவும் இயக்குனர் விக்ரமன் தெரிவித்திருக்கிறார்.
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...
TVK Vijay: தவெக தலைவர் நடிகர் விஜய் கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள மக்களை...
Vijay TVK: கடந்த 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை நடத்தப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் விஜய்...