Cinema History
K.Balachander: நடிகரின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய பாலசந்தர்… யார்…? என்ன படம்னு தெரியுமா?
நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் பூவிலங்கு மோகன். பாலசந்தர் தான் இவரை திரையுலகிற்கு அழைத்து வந்துள்ளார். ஏராளமான சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார். இவர் தனது சினிமா அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
நாடகத்தில் நடிச்சேன்
நான் சின்ன வயசுல இருந்தே சினிமாவுக்கு வரணும்னா கே.பாலசந்தர் இயக்கத்தில் தான் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். காலகேந்திரா கோவிந்தரராஜ் சார் சொன்னதால விசு, கோமல் சுவாமிநாதன் அவர்களைப் பார்க்கலாம்னு முடிவு பண்ணினேன்.
Also read: Sarathkumar: ஷூட்டிங்கில் கெட்டுப் போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு!… நாட்டாமை செய்த தரமான சம்பவம்!..
அதுல கோமல் சாரை செலக்ட் பண்ணி தண்ணீர் தண்ணீர் நாடகத்தில் நடிச்சேன். அது பிரமாதமா போனது. கேபி சார் கூப்பிடுறதா சொன்னாங்க. கே.பாலசந்தர் சாரைப் பார்க்கப் போனேன்.
பொய்யான நம்பிக்கை
அங்கே போனதும் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தாரு. தண்ணீர் தண்ணீர் பார்த்தேன் பிரமாதமா இருந்துச்சு. நான் கூட ரொம்ப நாளா அதை பிலிம்மா எடுக்கணும்னு நினைச்சேன்னு சொன்னாரு.
அப்புறம் கொஞ்சம் நேரம் என்னையேப் பார்த்துக்கிட்டு இருந்துட்டு சரி சரி போ போ. சும்மா உன்னைப் பார்க்கணும்னு தான் கூப்பிட்டேன்னாரு. நான் கூட ஏதோ பெரிய ரோல் கொடுக்கப் போறாருன்னு நினைச்சேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சின்ன ரோல்
ஆனால் அவருக்காக ஒரு சின்ன ரோல் படத்தில் கொடுத்துருப்பாராம். ஓட்டுப் போட எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமத்தில் வாக்குச்சாவடியில் போய் மை எல்லாம் வச்சிட்டு, தண்ணீர் மட்டும் குடித்து விட்டு வெளியே வர்ற சீன். நான் ஓட்டுப்போட்டதா நினைச்சு எல்லாரும் அடிப்பாங்க. அது தான் என்னோட ரோல் என்கிறார் பூவிலங்கு மோகன்.
தண்ணீர் தண்ணீர்
1981ல் கே.பாலசந்தர் இயக்கிய படம் தண்ணீர் தண்ணீர். இந்தப் படமானது கோமல் சுவாமிநாதன் எழுதிய தண்ணீர் தண்ணீர் என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சரிதா, ராதாரவி, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
Also read: Kanguva: கங்குவா ட்ரெய்லரில் வந்த நம்பர்!… இதுல இப்படி ஒரு நியூமராலஜி இருக்கா?!… பயங்கரமா இருக்கே!…
இந்தப் படத்தில் தான் பூவிலங்கு மோகனும் நடித்துள்ளார். அவர் என்ன சொல்கிறார்னா நாடகத்தில் கோமல் சார் ஒரு ஸ்டேஜோட எக்ஸ்பீரியன்ஸைக் கொண்டு வந்தாரு. ஆனா பாலசந்தர் சார் ஒரு பிலிமோட எக்ஸ்பீரியன்ஸக் கொண்டு வந்துருக்காரு என்றார்.