Anjali: ‘கேம் சேஞ்சர்’ டீசர் விழாவில் படு கிளாமராக வந்த அஞ்சலி… வைரலாகும் வீடியோ

Published on: November 11, 2024
anjali
---Advertisement---

Game Changer:

ராம்சரணின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா லக்னோவில் நடைபெற்றது. இந்தப் படத்தின் அதிர்வலைகள் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படம் ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த விழாவிற்கு ராம்சரண் , கியாரா அத்வானி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பார்வையாளர்களை ஈர்த்த அஞ்சலி: படத்தை சங்கர் இயக்கியிருக்கிறார். தில் ராஜூ படத்தை தயாரித்திருக்கிறார். படத்தில் நடிகை அஞ்சலி ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த டீசர் விழாவிற்கு அஞ்சலி மிகவும் கவர்ச்சி உடையணிந்து கலந்து கொண்டார். அனைவரின் பார்வையும் அஞ்சலி மீதுதான் இருந்தது.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..

ஆனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தார் அஞ்சலி. படத்தின் கதைக்களம், அதன் தயாரிப்பு இவற்றையெல்லாம் பார்க்கும் போது 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ரிலீஸ் படமாக இந்த கேம் சேஞ்சர் திரைப்படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

டீஸர் ஹைலைட்ஸ்: ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். டீசரை பார்க்கும் போது ஒரு நிமிடத்தில் ராம் சரண் கதாபாத்திரம் கல்வி பயணத்துடன் தொடங்குகிறது. யுபிஎஸ்சி தேர்வுக்கு ராம் சரண் தயாராகுகிறார். இப்படி ஆரம்பிக்கும் டீசர் அடுத்து சக்திவாய்ந்த ஒரு அரசாங்க அதிகாரியாக மாறுவது போல காட்சி மாறுகிறது. ஊழல் நிறைந்த அமைப்புக்கு ஒரு சவால் விடும் கதாபாத்திரமாக ராம் சரணின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: Delhi Ganesh: பிரதீப் ரெங்கநாதன் செஞ்ச துரோகம்.. வருத்தப்பட்டு பேசிய டெல்லி கணேஷ்

பொதுவாக சங்கரின் திரைப்படங்கள் டீஸரிலேயே மக்களின் கவனத்தை ஈர்க்கும் .அதே போல்தான் இந்த கேம் சேஞ்சர் படத்தின் டீசரும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. டீஸர் வெளியான 24 மணி நேரத்தில் 70மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.

game
game

மூன்றாவது படம்: படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றியிருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான வினய விதேய ராமா படத்தில் ராம்சரணும் கியாரா அத்வானியும் இணைந்து நடித்திருந்தனர். இது கியாரா அத்வானியின் மூன்றாவது தெலுங்கு படமாகும். இந்த நிலையில்தான் அஞ்சலியின் அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க:https://www.instagram.com/reel/DCOu9nZPdFw/?igsh=MXJyMzExanVoaWE5Mg==

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.