Cinema History
3 நாள் கொல பட்டினி!.. என் பசியை போக்கியது அதுதான்!.. இளையராஜா உருக்கம்!…
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அந்த படத்தில் இடம் பெற்ற ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பாடியது. அப்போது ரேடியோவில் ஒளிபரப்பப்பட்ட இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன்பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா. 80களில் உருவான 90 சதவீத படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான். இளையராஜாவின் இசையை நம்பியே அப்போது பல படங்களும் உருவானது.
இதையும் படிங்க: அமரன் படம் பார்க்க தனி விமானத்தில் வந்த சூர்யா – ஜோதிகா!… யாருக்காவது தெரியுமா?!..
மொக்கை படத்தை கூட தனது இசையால் ஓட வைத்து தயாரிப்பாளருக்கு லாபம் வர வைத்தார் இளையராஜா. எனவே, படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இளையராஜா மாறிப்போனார். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த என எல்லோரின் படங்களுக்கும் ராஜாதான் இசை.
சினிமாவுக்கு வருவதற்கு முன் பல கஷ்டங்களையும், வறுமையையும் பார்த்தவர்தான் இளையராஜா. தேனியிலிருந்து சென்னை வந்து நாடகங்களை போட்டுக்கொண்டிருந்தார் பாரதிராஜா. அவரை நம்பி இளையராஜாவும், கங்கை அமரனும் சென்னை வந்து அவருடன் தங்கினார்கள்.
யாரிடமும் பணம் இருக்காது. பல வேளைகள் பட்டினி கிடந்திருக்கிறார்கள். இதுபற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ‘ யாரிடமும் பணம் இல்லை. 3 நாட்கள் நாங்கள் மூன்று பேரும் சாப்பிடவில்லை. அப்போது ஆயுத பூஜை வந்தது. வடபழனி ராம் தியேட்டருக்கு எதிரில் உள்ள ஒரு தெருவின் கடைசியில் இருந்தோம். ஆயுதபூஜை என்பதால் எல்லா கடைகளிலும் பொரிக்கடலை, சுண்டல் ஆகியவற்றை கொடுத்தார்கள்.
அதை பல கடைகளிலும் நங்கள் வாங்கி அறைக்கு எடுத்து சென்று ஒரு பேப்பரில் கொட்டி ஒன்றாக கலந்து அதை அள்ளி எல்லோரும் சாப்பிட்டு பசியை ஆற்றினோம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையை ஓட்டினோம்’ என சொல்லி இருக்கிறார் இளையராஜா.
இதையும் படிங்க: Anshitha: என்னுடைய மூன்று வருட காதலன் வேறு பெண்ணுடன்… கதறி துடித்த அன்ஷிதா… யாருனு தெரிதா?