Connect with us

Cinema News

Vijay: ஆக்டிங் மட்டுமில்ல!.. சின்ன வயசில இருந்தே விஜய்க்கு அந்த ஆசை உண்டு!.. எஸ்.ஏ.சி பேட்டி!…

Actor vijay: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய். 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார். அதற்கு மேல் அவர் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அவரோ சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போவதாக அறிவித்திறார்.

பெரும்பாலான ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு போவதை விரும்பினாலும் விஜயை மிகவும் நேசிக்கும் அவரின் ரசிகர்கள் அவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு செல்வதை விரும்பவில்லை. ஆனால், விஜயின் முடிவு அதுவாகவே இருக்கிறது. கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய்.

இதையும் படிங்க: Sun serials: சுந்தரி முதல் கயல் வரை… சன் டிவி டாப் 5 தொடர்களின் இன்றைய எபிசோட் இதுதான்…

இது அவரின் 69வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு பின் அவர் மீண்டும் சினிமாவுக்கு வருவாரா என்பது தெரியவில்லை. அதை 2026 சட்டமன்ற தேர்தலே முடிவு செய்யும். விஜய் சிறுவயதிலிருந்தே தான் ஆசைப்பட்டதை அடையும் குணம் கொண்டவர். அவரை மருத்துவராக்க வேண்டுமென்றே அவரின் அப்பா எஸ்.ஏ.சி.யும், அம்மா ஷோபாவும் ஆசைப்பட்டனர்.

ஆனால், நான் சினிமாவில் நடிக்கத்தான் போவேன் என அடம் பிடித்து நடிகராகிவிட்டார் விஜய். சிறு வயதில் விஜய்க்கு 3 விஷயங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. சினிமாவில் நடிப்பது, நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் புதிய கார்கள் மீதும் அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்திருக்கிறது.

vijaycar

vijaycar

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சி ‘மார்க்கெட்டில் எந்த புதிய கார் வந்தாலும் அதை உடனடியாக வாங்க வேண்டுமென விஜய் அடம்பிடிப்பார். கல்லூரியில் படிக்கும்போதிலிருந்தே இதை செய்து வருகிறார். அதனால், சென்னைக்கு மார்க்கெட்டில் எந்த புதிய கார் வந்தாலும் அவருக்காக நான் வாங்கிவிடுவேன்’ என சொல்லி இருக்கிறார்.

விஜயிடம் இப்போது பி.எம்.டபிள்யூ, ஆடி, ரோல்ஸ் ராயஸ், லெக்சஸ் LM350h என பல கார்கள் இருக்கிறது. சில கார்களை வெளிநாட்டிலிருந்தும் அவர் இறக்குமதி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 நாள் கொல பட்டினி!.. என் பசியை போக்கியது அதுதான்!.. இளையராஜா உருக்கம்!…

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top