Samantha: சொந்த வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்த நடிகை சமந்தா தன்னுடைய சினிமா வாழ்க்கையில் சீராக சென்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவர் தனக்கு இருக்கும் ஆசையை சொல்லி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ் பெண்ணான நடிகை சமந்தா தெலுங்கு பக்கம் சென்று பிசியான நடிகையாக வலம் வருகிறார். நாக சைதன்யாவுடன் விவாகரத்து அறிவிக்கப்பட்ட போது சமந்தா குறித்து ரசிகர்கள் ரொம்பவே வருத்தப்பட்டனர். தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மியோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார் சமந்தா.
இதையும் படிங்க: Sun serials: சுந்தரி முதல் கயல் வரை… சன் டிவி டாப் 5 தொடர்களின் இன்றைய எபிசோட் இதுதான்…
தொடர்ந்து பலநாட்களாக சிகிச்சையில் இருந்த சமந்தா டிரிப்ஸ் போட்டுக்கொண்டு யசோதா படத்தின் டப்பிங் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இருந்தும் சமந்தா தொடர்ந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.
பல வருடங்கள் கழித்து சமந்தா நடிப்பில் சிட்டாடல் வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. ஃபேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இதை இயக்கி இருக்கின்றனர். ஒரே வாரத்தில் சிட்டாடல் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதன் புரோமோஷன் பணிகளில் கலந்துக்கொண்டு இருக்கும் நடிகை சமந்தா, எனக்கு இன்னும் தாயாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக இன்னும் காத்திருக்கிறது. அது ஒரு அழகான அனுபவம். பல பெண்களுக்கு தாயாகும் போது வயதைப் பற்றி கவலை இருக்கிறது.
இதையும் படிங்க: Vijay: ஆக்டிங் மட்டுமில்ல!.. சின்ன வயசில இருந்தே விஜய்க்கு அந்த ஆசை உண்டு!.. எஸ்.ஏ.சி பேட்டி!…
ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு வயது என்றுமே ஒரு தடையாக இருக்காது. நானும் அம்மாவாக வேண்டும் என்கிற கனவு இன்னமும் தனக்கு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். யசோதா படப்பிடிப்பு சமயத்தில் நான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே அந்த வாய்ப்பை முதலில் மறுத்தார் சமந்தார்.
பின்னர் குறிப்பிட்ட மாதத்திற்குள் தான் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்படத்தில் இணைந்ததாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இருந்தும் நாக சைதன்யாவுடன் திடீரென விவாகரத்தை அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
