என் pant-அ பிடிச்சு! முழு நேர வேலையாவே இததான் பண்றாரு போல.. குசும்பு பிடிச்ச ஷாரிக்

Published on: November 12, 2024
mariya
---Advertisement---

Shariq: தமிழ் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ரியாஸ்கான். அவர் நடிகை உமா ரியாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருடைய மூத்த மகன் ஷாரிக். இவர் பிக் பாஸில் கலந்து மக்களிடையே பிரபலமானவர். பிக்பாஸுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில் சரியான வாய்ப்புகள் அமையாமல் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்.

காதலித்து திருமணம்: கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது. மரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷாரிக். மரியாவுக்கு ஏற்கனவே 9 வயதில் ஜாரா என்கிற மகள் இருக்கின்றார். உடற்பயிற்சி நிலையத்தில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ஷாரிக் மரியாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான முதல் இன்று வரை பல youtube சேனல்களுக்கு தம்பதிகளாக இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றனர்.

திருமணம் ஆனதிலிருந்து இருவருமே மிகவும் ரொமான்டிக்காக ஒருவர் மீது ஒருவர் அலாதி அன்புடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் இவர்கள் இருவரிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இருவரில் யார் அதிகம் கிஸ் பண்ணுவது என்று கேட்க அதற்கு ஷாரிக் தான் என மரியா கூறியிருந்தார்.

அந்த பார்ட் மிகவும் பிடிக்கும்: மேலும் ஷாரிக்கின் எந்தப் பார்ட் மிகவும் உங்களுக்கு பிடிக்கும் எனக் கேட்டபோது அவருடைய கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் .பார்ப்பதற்கு ரன்வீர் கண்கள் மாதிரியே இருக்கும் என மரியா கூறியிருந்தார். பொதுவெளியில் யார் அதிகமாக ரொமான்டிக்காக இருப்பார் எனக் கேட்டதற்கு அதற்கும்ஷாரிக் தான் என மரியா கூறினார்.

shariq
shariq

மேலும் இருவரும் சேர்ந்து நடக்கும் போது மரியாவின் பின் பாக்கெட்டை பிடித்துக் கொண்டே தான் ஷாரிக் நடப்பாராம். ஏனெனில் மரியாவிற்கு எப்படி நடக்க வேண்டும் எந்த மாதிரி நடக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே அவருடைய பேண்ட் பாக்கெட்டை பிடித்துக் கொண்டு வழிநடத்துவாராம் ஷாரிக். மேலும் உங்களுடைய லவ் லாங்குவேஜ் எது என கேட்டதற்கு அதற்கு மரியா பிஸிக்கல் டச் என பதில் அளித்து இருந்தார். எப்போதுமே நாங்கள் இருவரும் இறுக்கமாக கைகோர்த்து தான் இருப்போம். அதுதான் எங்களுடைய லவ் லாங்குவேஜ் என கூறினார்.

இந்த பேட்டியை பார்த்த பலரும் சரியான கிரிஞ்ச் லவ்வராக இருப்பார்கள் போல. இதே வேலையாத்தான் இருப்பார்கள் போல என்றெல்லாம் கமெண்ட்டில் கூறி வருகிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.