Cinema News
எஸ்.கே-வுக்கு இப்படி ஒரு குடும்ப பெருமை இருக்கா!.. எங்க இருந்து வந்திருக்கார் பாருங்க!…
Sivakarthikieyan: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வளர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். கல்லூரி படிப்புக்கு பின் இசை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து கொண்டிருந்தார். விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்படியே விஜய் டிவியில் ஆங்கராக மாறி சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக வேலை செய்தார்.
சில வருடங்கள் அங்கு பணிபுரிந்த சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. பல இயக்குனர்களிடமும் சென்று வாய்ப்பு கேட்டார். ஒன்றும் நடக்கவில்லை. தனுஷின் அறிமுகம் கிடைத்த பின்னரே அவரின் வாழ்க்கை மாறியது, 3 படத்தில் தன்னுடன் நடிக்க வைத்தார் தனுஷ்.
இதையும் படிங்க: Indian 2: இத்தனை பேர் இறந்துட்டாங்களா?… இந்தியன் 2 வின் மோசமான சாதனை!
அதன்பின் எதிர்நீச்ச்சல் படத்தில் அவரை ஹீரோவாக போட்டு அப்படத்தை தயாரித்தார் தனுஷ். அந்த படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை பிரபலப்படுத்தியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் சிவகார்த்திகேயனை ஒரு முன்னணி நடிகராக மாற்றியது.
குறுகிய காலகட்டத்தில் பல சீனியர் நடிகர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி அவர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். தற்போது தீபாவளி ரிலீஸாக வெளிவந்த அமரன் திரைப்படம் வசூலில் சக்கை போட்டு போட்டு வருகிறது. படம் வெளியாகி 12 நாட்களில் 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் அப்பா தாஸ் ஒரு போலீஸ் அதிகாரி என்பது எல்லோருக்கும் தெரியும். சிறையில் பணிபுரிந்தவர். சிவகார்த்திகேயன் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்திருக்கிறார். இது பலருக்கும் தெரியும். ஆனால், யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது.
சிவகார்த்திகேயனின் பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புனரி என்னும் ஊர்தான். அவரின் தாத்தாக்களான கோவிந்த்ராஜ் பிள்ளை மற்றும் தட்சணாமூர்த்தி பிள்ளை ஆகிய இருவரும் மிகவும் பிரபலமான நாதஸ்வர கலைஞர்களாக இருந்தவர்கள். 1987ம் வருடத்திலேயே ரஷ்யா வரை சென்று கச்சேரி நடத்தி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அந்த இயக்குனருடன் எஸ்.கே?!.. ஃபிளாப் கொடுத்தும் திருந்தலயே!. நல்லாதானே ‘போகுது!..