Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் ‘மலர்ந்த’ புதிய காதல்?

Published on: November 13, 2024
---Advertisement---

Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் கடந்த ஏழு சீசன்களாக மலர்ந்து மணம் வீசிய காதல் பூ இந்த சீசனில் இதுவரை மலரவில்லை. இது பிக்பாஸ் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மனக்குறையை அளித்துள்ளது. சொல்லப்போனால் அங்கு மலர்ந்து ஓரளவு திருமணத்தில் வந்து நிற்பது அமீர்-பாவனி காதல் தான்.

வேறு யாருமே அந்தளவு காதல் செய்யவில்லை. வீட்டில் இருந்து வந்ததும் காதலுக்கும் சேர்த்து டாட்டா, பை பை சொல்லி விடுகின்றனர். என்றாலும் ஒரே வீட்டுக்குள் இருப்பதால் நாளடைவில் சிலர் காதல் வயப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது.

Also Read

இதையும் படிங்க: Indian 2: இத்தனை பேர் இறந்துட்டாங்களா?… இந்தியன் 2 வின் மோசமான சாதனை!

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்திருக்கும் ரானவ், பவித்ராவிற்கு ஸ்கெட்ச் போட்டு வருவதாக தெரிகிறது. சமீபகாலமாக பவித்ரா எங்கு சென்றாலும் அவர் பின்னாலேயே ரானவ் சுற்றி வருகிறார். இதை உறுதிப்படுத்துவது போல மற்றொரு வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றுள்ள ரயான், தர்ஷிகாவிடம் இவர்கள் காதல் விவகாரத்தை பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.

raanav
#image_title

ரயானின் கேள்விக்கு சாப்பிட்டுக் கொண்டே பதில் அளிக்கும் தர்ஷிகா, ‘அவளுக்கும் பிடிக்கணும்ல’ என சொல்கிறார். இதில் இருந்து பவித்ராவுக்கு இதில் விருப்பமில்லை. ரானவ்தான் முயலுக்கு மூன்று கால் என்பதுபோல விடாமுயற்சி செய்து வருகிறார் என்பது உறுதியாகிறது. ஆனால் ரானவின் முயற்சிகளை பார்த்த ரசிகர்கள் இது பவித்ராவின் கேமினை தடுக்க ரானவ் முயற்சி செய்வதுபோல தெரிகிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் சர்ஜரியா செஞ்சிருக்கேன்… இங்க தொட்டு பாருங்க… ஓபனா பேசிட்டாரே நயன்!..