இப்படி நீங்க பண்ணக்கூடாது?!… அமரன் டீமுக்கு முக்கிய கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள்!…

Published on: November 13, 2024
---Advertisement---

அமரன் திரைப்படத்தை 8 வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அமரன் திரைப்படம்: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளில் சக்கப்போடு போட்டு வருகின்றது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்த இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.

இதையும் படிங்க: டேய் முட்டாள்!.. ரசிகரை திட்டிய சூர்யாவின் பவுன்சர்ஸ்!.. இதெல்லாம் ரொம்ப ஓவர் புரோ!..

வசூல் பேட்டை: படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து உலகம் முழுவதும் 12 நாட்களில் 250 கோடியை தாண்டி இருக்கின்றது. விரைவில் இப்படம் 300 கோடியை எட்டும் என்று பலரும் கூறி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் கெரியரிலேயே மிகப்பெரிய வசூலை கொடுத்த திரைப்படம் அமரன் தான்.

சிவகார்த்திகேயன் மார்க்கெட்: அமரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பாராட்டை பெற்றுக் கொடுத்திருக்கின்றது அமரன் திரைப்படம். இதனால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி மிகவும் பிசியான நடிகராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Amaran
Amaran

ஓடிடி ரிலீஸ்: அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை netflix நிறுவனம் வாங்கியிருந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடி-யில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை அமரன் திரைப்படம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் netflix நிறுவனம் தங்களது வெளியீட்டை தள்ளி வைத்திருந்தார்கள்.

இதையும் படிங்க: ஓவர் ஹைப் ஏத்தி ரசிகர்களை கதறவிட்ட 4 திரைப்படங்கள்!.. இதுல இந்தியன் 2 வேறலெவல்!..

திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை: நாளை கங்குவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் அமரன் திரைப்படத்தின் வரவேற்பு குறையும் என்றும், இதனால் விரைவில் netflix நிறுவனம் ஓடிடி-யில் இப்படத்தை வெளியிட்டு விடுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்கள்.

அமரன் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியான 8 வாரங்கள் கழித்து ஓடிடி-யில் தளத்தில் வெளியிட வேண்டும் என்று ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக  கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.