பிளடி பெக்கர் லாஸ்… யோசிக்காமல் நெல்சன் செய்த செம மேட்டர்… நீங்க கிரேட்டு சார்…

Published on: November 13, 2024
Bloody Beggar
---Advertisement---

Bloody Beggar:  தீபாவளி தினத்தில் பிளடி பெக்கர் திரைப்படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் செய்திருக்கும் விஷயம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்சன் திலீப்குமார்: கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப் குமார் முதல் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றார். இதை தொடர்ந்து அவருக்கு சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படத்தையும் சிவகார்த்திகேயன் ஜானரில் இருந்து மாறி எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ரிலீஸ் ஆன டாக்டர் திரைப்படம் பல இடங்களில் வசூலை குவித்தது. சிறந்த நடிகர், சிறந்த படம் உள்ளிட்ட விருதுகளையும் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மே 1ஆம் தேதிக்கு இவ்வளவு டிமாண்ட்டா?!… லிஸ்டில் இணைந்த சூப்பர் ஸ்டார்!… ஆட்டம் சூடு பிடிக்குது!…

இதைத்தொடர்ந்து பீஸ்ட் திரைப்படம் நெல்சனுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்க ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கிய இடம் பிடித்தது. இதற்காக நெல்சன் திலீப் குமார் மிகப்பெரிய அளவில் சம்பளத்தையும் பெற்றார்.

தயாரிப்பாளர் திலீப்குமார்: இந்த வருமானத்தை வைத்து  பிளடி பெக்கர் என்னும் திரைப்படத்தை தயாரித்தார். படத்தின் டைட்டில் அறிவிப்பு தொடங்கி கடைசி கட்ட பிரமோஷன் வரை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தீபாவளி தினத்தை முன்னிட்டு அமரன் மற்றும் பிரதர் திரைப்படத்தை எதிர்த்து இந்த படமும் வெளியானது.

ஆனால் இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் படம் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. அமரனின் அசுர வெற்றியால் படத்திற்கான தியேட்டர் குறைந்ததும் காரணமாக அமைந்தது. இதனால் படத்தின் வசூலில் மிகப்பெரிய அடி விழுந்தது.

இதையும் படிங்க: இப்படி நீங்க பண்ணக்கூடாது?!… அமரன் டீமுக்கு முக்கிய கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள்!…

இந்நிலையில் தமிழ்நாடு விநியோகிஸ்தருக்கு படத்திற்காக ஏற்பட்ட நஷ்ட தொகையை நெல்சன் திலீப் குமார் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டு உரிமையை 5 ஸ்டார் செந்தில் என்பவர் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகையை நெல்சன் திருப்பிக் கொடுத்திருந்தாலும் பிளடி பெக்கர் திரைப்படம் அவருடைய நிறுவனத்திற்கு லாபகரமான படமாகவே அமைந்து இருக்கிறது. இப்படத்திற்கான மற்ற உரிமைகள் விற்பனை இதை சாத்தியப்படுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.