Coolie: ரஜினி நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் சில முக்கியமான பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதுவும் கூட்டமான இடங்களை பார்த்து படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் லோகேஷ்.
இதில் எப்படி ரஜினியை வைத்து படப்பிடிப்பை நடத்துவார் என்ற வகையில் பார்க்கும்பொழுது ரஜினி இல்லாமல் மற்ற காட்சிகளைத் தான் இங்கு எடுத்து வருவதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் கூலி படத்தின் ரிலீஸ் தேதி மே மாதம் ஒன்றாம் தேதி என்ற ஒரு தகவல் திடீரென சமூக வலைதளங்களில் பரவியது.
இதையும் படிங்க: உலகநாயகனுக்கே சோதனையா…? ஏர்போர்ட்ல நாலு மணி நேரமாக கமலுக்குத் தொல்லை…!
இன்னும் சிலர் மே எட்டாம் தேதி என்றும் கூறி வந்தார்கள். மே ஒன்றாம் தேதி ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் சிவகார்த்திகேயன் படமும் வெளியாக உள்ளது. எப்படி அந்த தேதியில் கூலி திரைப்படத்தை ரிலீஸ் செய்வார்கள் என்றும் பலபேர் கேள்விகளை எழுப்பி வந்தனர். சரி மே எட்டாம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று பார்க்கும் பொழுது மே ஒன்றாம் தேதி அஜித் சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது ஒரு வாரத்திற்குள் அந்த படத்தை தூக்கி விட முடியாது.
அதனால் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கண்டிப்பாக மே 8-ம் தேதி இருக்காது. இதற்கிடையில் கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதால் அவர்களின் வழக்கமான ஒரு பாணி என்னவெனில் அவர்கள் ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் முழு படத்தையும் பார்த்த பின்னர் தான் படத்தை வெளியிட முடிவு செய்வார்களாம்.

இதையும் படிங்க: Jyothika: இப்படியெல்லாம் மாமனார் வீட்ல இருக்க முடியுமா ? மும்பையில் படு ஜாலியா சுத்தும் ஜோதிகா
அப்படி இருக்கும் பொழுது கூலி திரைப்படம் எப்படியும் ஆகஸ்ட் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்று கோடம்பாக்கத்தில் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதில் இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டியது என்னவெனில் அஜித் சிவகார்த்திகேயன் என இருவருமே ரஜினிக்கு மிகவும் பிடித்தமான நடிகர்கள். அப்படி இருக்கும் போது அவர்களுடன் ரஜினியின் படம் கண்டிப்பாக நேருக்கு நேர் மோதாது. ரஜினியும் அதை விரும்ப மாட்டார் என்ற ஒரு செய்தியும் ஒரு பக்கம் உலாவி வருகின்றது.
